Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Simbu – Nayanthara Marriage Poster On Valentines day.

By   /  February 14, 2016  /  Comments Off on Simbu – Nayanthara Marriage Poster On Valentines day.

    Print       Email

மாலையும் கழுத்துமாக நயன்தாரா- சிம்பு போஸ்டர்கள்; காதலர் தினத்தன்று வெளியிட்டு படக்குழுவினர் பரபரப்பு.idhu-namma-aalu1512014-t  

இன்று காதலர் தினத்தை உலக காதலர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர் நடிகைகளும் காதலர் தினத்தை வரவேற்று அதைக் கொண்டாடியும் வருகிறார்கள்.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில் சினிமாவில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் காதலர்களாக இருந்து பிறகு பிரிந்துபோன சிம்புவும்- நயன்தாராவும் இன்றைய காதலர் தினத்தில் மாலையும் கழுத்துமாக அனைவருக்கும் காட்சியளித்தார்கள்.

சிம்பு நயன்தாரா காதல் முறிவுக்குப் பிறகு எந்த படங்களிலும் சேர்ந்து நடிக்காத இருவரும் தற்போது இது நம்ம ஆளு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி இருக்கிறது. ஏற்கெனவே இந்தக் காட்சி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காதலர் தினமான இன்று இது நம்ம ஆளு படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சிம்புவும் நயன்தாராவும் கழுத்தில் மாலையுடன் திருமண வரவேற்பில் நிற்பது போன்ற புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர்.

இந்த போஸ்டர்கள் இன்று இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அடுத்த மாதம் இப்படம வெளியாகவிருக்கிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →