Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Singapore blocks visas to Indian IT professionals

By   /  April 4, 2017  /  Comments Off on Singapore blocks visas to Indian IT professionals

    Print       Email

Singapore-Stops-Issuing-Visasசிங்கப்பூரில் பணிபுரிய இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு விசா மறுப்பு

அமெரிக்காவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் பணியாற்றுவதில் சிக்கல் எழுந்து உள்ளது. அங்கு பணிபுரிய செல்லும் இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு விசா மறுக்கப்பட்டு வருகிறது.

InCorpTaxAct
Suvidha

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அந்த நாட்டில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்கான விசா வழங்குவதில் ஏராளமான கெடுபிடிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இதனால், அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள்தான். இதனால் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில், இதேபோன்ற கெடுபிடிகளை நமது நட்பு நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு முதலே இந்தியாவில் இருந்து பயிற்சிக்காக தனது நாட்டுக்கு வரும் ஐ.டி. ஊழியர்களுக்கு விசா வழங்குவதில் சிங்கப்பூர் அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வரத் தொடங்கியது.

அண்மையில் இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனங்களில் இருந்து பயிற்சிக்காக சிங்கப்பூர் செல்லும் ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் விசா வழங்க மறுத்து வருகிறது. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் மற்றும் சில தொழில் நிறுவனங்கள் சார்பில் சிங்கப்பூரில் பயிற்சி அளிப்பதற்காக அண்மையில் ஐ.டி. ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் விசா வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்துவிட்டது.

அது மட்டுமல்ல, சிங்கப்பூருக்கு மற்ற எல்லா நிறுவனங்களையும் விட முன்கூட்டியே சென்று ஐ.டி. நிறுவனங்களை தொடங்கிய எச்.சி.எல். மற்றும் டி.சி.எஸ். ஆகியவற்றுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அண்மையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது. அதில், உங்களுடைய நிறுவனங்களில் பணி புரிவதற்கு எங்கள் நாட்டில் உள்ள திறமையான ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

இந்த அறிவுறுத்தல் இன்போசிஸ், விப்ரோ, காக்னிசான்ட், எல் அண்ட் டி இன்போடெக் போன்ற நிறுவனங்களுக்கும் தற்போது அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சிங்கப்பூரில் உள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அருகில் உள்ள வேறு நாடுகளுக்கு தங்களுடைய அலுவலகங்களை இடம் மாற்றம் செய்யவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்கிறது.

தங்கள் நாட்டின் ஐ.டி. பணியாளர்களை இந்திய நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக நியமிப்பதற்காக, ‘பொருளாதார தேவைகளுக்கான சோதனை’ என்ற பெயரை சிங்கப்பூர் அரசாங்கம் சாதுர்யமாக சூட்டி இந்திய ஐ.டி. ஊழியர்களை வடிகட்டத் தொடங்கி உள்ளது.

இது இந்தியா-சிங்கப்பூர் இடையே செய்து கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே சிங்கப்பூருடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுத்து வருகிறது.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →