அடுத்த அஜித் படம் சிவா இயக்கத்தில்.
‘வீரம்’, ‘வேதாளம்’ படக் கூட்டணியான அஜித் – சிவா இருவரும் மீண்டும் இணைந்து படம் பண்ண ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
“நாளை (வியாழக்கிழமை) அஜித்தை சந்தித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை கையெழுத்திட இருக்கிறார்கள். இப்படத்தை ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்” என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
இப்படத்தில் அஜித்துடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு நடைபெறுவதைப் பொறுத்து படத்தின் வெளியீட்டை முடிவு செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.