
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்லியில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் கடும் பனி மூட்டம், போக்குவரத்து சேவையை வெகுவாக பாதித்துள்ளது. தினமும் ரெயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று டெல்லிக்கு வரும் 64 ரெயில்கள் தாமதமாக வரும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. 24 ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 21 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் 20 விமானங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.