Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Smriti Irani sensation letter on the Facebook

By   /  June 17, 2016  /  Comments Off on Smriti Irani sensation letter on the Facebook

    Print       Email

பேஸ்புக் வலைத்தளத்தில் ஸ்மிரிதி இரானி கடிதத்தால் பரபரப்பு. Smriti-Irani_Mumbai_PTI

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீகார் கல்வி மந்திரி அசோக் சவுத்ரி, தனக்கு ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் ‘டியர்’ என அழைத்து ‘கல்வி கொள்கை என்னாயிற்று?’ என கேள்வி எழுப்பி வெளியிட்ட செய்திக்கு மத்திய பெண் மந்திரி ஸ்மிரிதி இரானி எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினார்.

InCorpTaxAct
Suvidha

‘பெண்களை டியர் என அழைத்து தொடங்குவது சரியல்ல’ என்று அவர் சொல்ல, அசோக் சவுத்ரி, ‘இதில் அவமரியாதை ஏதுமில்லை. பணி ரீதியிலான தகவல் தொடர்புகளை டியர் என தொடங்கலாம்’ என பதில் கூற, இருவர் இடையே வார்த்தை யுத்தம் நீடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ஸ்மிரிதி இரானி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் அடிக்கடி இப்படிப்பட்ட சண்டையில் ஈடுபடுவதின் பின்னணி குறித்து நீண்ட விளக்கம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பையன்களால் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிறபோது, அவர்கள் என்ன சொன்னாலும், பெண் பிள்ளைகள் பதில் அளிப்பதை தவிர்த்து விட வேண்டும் என்று வீடுகளில் சொல்லப்படுவதை சுட்டிக்காட்டி, ‘ஏன் இதை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது?’ என காட்டமாக கேட்டுள்ளார்.

தன்னை ‘ஆன்ட்டி நேஷனல்’ (தேசிய அத்தை?) என அழைத்துக் கொள்கிற ஸ்மிரிதி இரானி, தன்னை திறமை இல்லாதவர் என்று குற்றம் சாட்டிய அசோக் சவுத்ரிக்கு பதில் அளிக்கும் விதத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக தான் செய்த சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.

இந்த கடிதம் நிறைய ‘லைக்’குகளை பெற்றுள்ளது.

‘தினசரி வாழ்வில் பெண் பிள்ளைகளும், வேலைக்கு செல்கிற பெண்களும் கஷ்டங்கள் பட்டாலும் அவர்களுக்கு வீடுகளில் சொல்லப்படுகிற வாயை மூடிவிடு என்ற வார்த்தைகளால் எல்லாவற்றுக்கும் வாயை மூடிக்கொள்கிறார்கள். இது சரியல்ல’ என்று கூறி உள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →