Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Smruthi Irani transferred because of controversies.

By   /  July 6, 2016  /  Comments Off on Smruthi Irani transferred because of controversies.

    Print       Email

377182-368576-smriti-iraniஅதிகமான சர்ச்சைகளில் சிக்கியதால் ஸ்மிருதி இரானிக்கு இலாகா மாற்றம்.

சர்ச்சைகளில் சிக்கியதால் இலாகா மாற்றம் செய்யப்பட்ட ஸ்மிரிதி இரானி அதிருப்தி அடைந்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

மத்திய மந்திரிசபையை பிரதமர் மோடி மாற்றி அமைத்தார். அப்போது 19 புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். 5 பேர் நீக்கப்பட்டனர். சில மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டன.

ஸ்மிரிதி இரானியிடம் இருந்த மனிதவள மேம் பாட்டுத்துறை பிரகாஷ் ஜவடேகருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஸ்மிரிதிக்கு முக்கியத்துவம் இல்லாத ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்மிரிதி இரானி கல்வித்துறையில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இது பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியது.

முன்னதாக அவரது கல்வித்தகுதி சம்பந்தமாகவும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பிறகு ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலு தற்கொலை, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் போன்றவைகளாலும் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவேதான் ஸ்மிரிதி இரானியின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது.

மந்திரிசபை மாற்றம் தொடர்பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்மிரிதி இரானியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அமித்ஷா அவரை இலாகா மாற்றம் செய்ய சிபாரிசு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இலாகா மாற்றத்தால் ஸ்மிரிதி இரானி அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் இதை மறுத்தனர். ஜவுளித்துறை மிக முக்கியமான இலாகா என்பதால் ஸ்மிரிதி இரானிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய மந்திரிகள் இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது மந்திரிகள் சிறந்த முறையில் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →