Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Sonia Gandhi, Karunanidhi and Rahul will appear on the same stage – E.V.K.S.Elangovan

By   /  April 11, 2016  /  Comments Off on Sonia Gandhi, Karunanidhi and Rahul will appear on the same stage – E.V.K.S.Elangovan

    Print       Email

maxresdefault (11)சோனியா காந்தி, கருணாநிதி, ராகுல் காந்தி மூன்று பேரும் ஒரே மேடையில் பேசுகிறார்கள் – இளங்கோவன் அறிவிப்பு.

சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசனின் த.மா.கா. பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சு நடத்தியது.  இந்த நிலையில் ஜி.கே.வாசன் திடீரென்று மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார்.

InCorpTaxAct
Suvidha

அவரது முடிவுக்கு எஸ்.ஆர்.பால சுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினர். நிர்வாகிகளில் பலர் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் சேர முடிவு செய்து உள்ளனர். வேலூர் கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முனி ரத்தினம் மாநில செயலாளர் சுகுமார் தலைமையில் த.மா.கா.வினர் ஏராளமானோர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.

பின்னர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நமக்குள் எந்த பேதமும் இல்லை. சொந்த வீட்டிற்கு வந்தது போன்ற உரிமையோடு த.மா.கா.வில் இருந்து விலகி அனைவரும் இங்கு வந்துள்ளார்கள்.

கொஞ்ச நாட்கள் வெளியூர் சென்று லாட்ஜில் தங்கி ஓட்டலில் சாப்பிடுவது போல 10, 15 மாதம் வெளியே சென்றவர்கள் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்கள்.  நாம் எல்லோரும் காங்கிரஸ்காரர்கள்தான். த.மா.கா.வில் இருந்து வாசனை தவிர எல்லோரும் காங்கிரசுக்கு வரவேண்டும்.

வாசன் மீது மூப்பனார் மகன் என்ற ரீதியில் எனக்கு பாசம் உண்டு. ஆனால் எப்போது பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாரோ, அப்போதே துடித்துப் போனேன். எல்லோரும் வாருங்கள். தேர்தல் முடிவில் இருந்து காங்கிரசுக்கு புதிய அத்தியாயம் தொடங்கும்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஜெயலலிதாவுக்காக காத்து இருக்கிறார். அவரை விட்டு விட்டோம். பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன், கார்வேந்தன் உள்பட பலர் வர இருக்கிறார்கள்.

தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிக பிரமாண்டமானது. கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்கள் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு மக்கள் நலன் காக்க எடுக்கப்பட்டுள்ளது. மது விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை பா.ம.க.வை பார்த்து காப்பி அடித்தாக சொல்கிறார்கள். ஜெராக்ஸ் காபி எடுப்பதில் பா.ம.க.வுக்கு அதிக நம்பிக்கை உண்டு. ஒபாமா போலவே போஸ்டர் போட்டவர்கள் அவர்கள். எனவே எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் மது விலக்கை படிப்படியாக கொண்டு வருவேன் என்கிறார். ஒரு படி கூட ஏற முடியாதவரால் எப்படி படிப்படியாக அமல்படுத்த முடியும்.

ஆட்சியில் இருந்தபோது செய்ய மறுத்தையும், மறந்ததையும், இனிவர மாட்டோம் என்று தெரிந்து விட்டதால் மோடியைப் போல் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுப் பார்க்கிறார்.

சோனியா, ராகுல் ஆகியோர் தமிழகத்துக்கு பிரசாரத்துக்கு வருவார்கள். ஒரே மேடையில் கருணாநிதி, சோனியா, ராகுல், ஸ்டாலின், முஸ்லிம் லீக் தலைவர்கள், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகிய அனைவரும் ஒரே மேடையில் பேசுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →