Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Sonia Gandhi will release candidate list : says Elangovan

By   /  April 9, 2016  /  Comments Off on Sonia Gandhi will release candidate list : says Elangovan

    Print       Email

13-1455355199-evks-elangovan-v-600காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை சோனியா காந்தி வெளியிடுவார் – இளங்கோவன் அறிவிப்பு.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

InCorpTaxAct
Suvidha

அப்போது அவர் கூறிய தாவது:–

காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற த.மா.கா. மீண்டும் காங்கிரசுடன் இணைய வேண்டும். சொந்த தாய் வீடாக நினைத்து அனைவரும் திரும்பி வர வேண்டும். சோனியா, ராகுல் அழைப்பதாக கருதி த.மா.கா.வினர் காங்கிரசுக்கு வர வேண்டும்.

பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜி.கே.வாசன் பேசியதாக கேள்விப்பட்டதும் மிகவும் வருந்தினேன்.

மற்றபடி ஜி.கே.வாசன் மீது எனக்கு தனிப்பட்ட வருத்தம் எதுவும் இல்லை. அனைவர் மீதும் எனக்கு பாசம் இருக்கிறது. எனவே த.மா.கா.வினர் மீண்டும் காங்கிரசுக்கு வரவேண்டும்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களை அதற்கான குழு தேர்வு செய்து வருகிறது. இன்று அல்லது நாளை வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி விடும்.

அதன்பிறகு அந்த பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். 15 அல்லது 16–ந் தேதி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிடுவார்.

ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை அதே கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையின் போது கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தி.மு.க. ஏற்கனவே வெற்றி பெற்ற அரவாகுறிச்சி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி கூட்டணி கட்சிகளின் கொள்கை முடிவை மதித்து அந்த தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டும். கூட்டணி கட்சியான தி.மு.க.வின் வெற்றிக்கு அவர் பாடுபட வேண்டும்.

ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் சார்பிலும் போட்டியிட விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள். விருப்பமனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே போட்டியிட தொகுதி ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

மதுவிலக்கு, விவசாய கடன் தள்ளுபடி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான குழுவினர் அறிக்கையை தயாரித்து வருகிறார்கள். விரைவில் அது டெல்லிக்கு அனுப்பப்படும். கட்சி மேலிட ஒப்புதல் பெற்று அது வெளியிடப்படும்.

தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் வருகிறார்கள். அவர்கள் தமிழகம் வரும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

போட்டியிடும் 41 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வேட்பாளர் பட்டியலை மாற்றுவது ஜெயலலிதா ஸ்டைல்.

தேர்தல் கமிஷன் தமிழ்நாட்டில் நேர்மையான தேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க துணை ராணுவத்தை வரவழைத்தால் மட்டும் போதாது.

ஒவ்வொரு தொகுதியிலும் ராணுவத்தை நிறுத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க ராணுவத்தினர் மூலம் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →