தொடர்ச்சியாக 12 வெற்றிகள்; இரண்டாவது முறை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் தென் ஆப்பிரிக்க அணி.
தென்ஆப்பிரிக்கா அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதல் இடம்பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகளையும், இலங்கை அணிக்கெதிராக 5 போட்டிகளையும் மொத்தமாக வென்றுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான ஒரு போட்டியையும் வென்றிருந்தது.
தொடர்ந்து 11 வெற்றிகளை பெற்றிருந்த தென்ஆப்பிரிக்கா, நாளை நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களம் இறங்க இருக்கிறது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் தொடர்ந்து 12 போட்டிகளில் 2-வது முறையாக வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெறும்.
இதற்கு முன் ஆஸ்திரேலியா தொடர்ந்து 21 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. அதன்பின் தென்ஆப்பிரிக்கா 12 முறை வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.