Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Stalin attracts large crowds in campaign.

By   /  April 20, 2016  /  Comments Off on Stalin attracts large crowds in campaign.

    Print       Email

13051643_596951637131377_5184344570812409525_nஸ்டாலிக்குப் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் வெள்ளம்.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி  மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசி வருகிறார். அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் சாரிசாரியாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பொதுக்கூட்டங்களிலும் பெருவாரியான மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் தலைவராக வலம் வருகிறார் ஸ்டாலின். பெரம்பலூர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

InCorpTaxAct
Suvidha

முதல் – அமைச்சர் ஜெயலலிதா கடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். தேர்தல் நேரத்தில் உங்களிடம் வாக்கு கேட்க வந்த ஜெயலலிதா அதன் பின்னர் இந்த 5 வருட காலத்தில் குன்னத்திற்கோ அல்லது பெரம்பலூர் மாவட்டத்திற்கோ ஏதாவது ஒருமுறையாவது வந்து உங்களிடம் குறை கேட்டாரா? சிந்தித்து பாருங்கள். தேர்தல் பிரசார கூட்டங்களில் ஜெயலலிதா பொய்களையும், புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விட்டு வருகிறார்.

தி.மு.க. ஆட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் ஜெயலலிதா 13055499_596582993834908_5115788136413016977_nஆட்சிக்கு வந்ததும் அதனை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார். இதே போல் வேப்பந்தட்டை கூட்டு குடிநீர் திட்டமும் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டது. ஜெயங்கொண்டம் முந்திரி தொழிற்சாலை, முந்திரி ஆய்வு மையம் ஆகியவற்றையும் கொண்டு வர எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து முதியோர்களுக்கும் முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 60 சதவீதம் பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்படுவது இல்லை.

சென்னை தீவு திடலில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஜெயலலிதா இடையில் கொஞ்சம் ‘கேப்’ விட்டு நேற்று காஞ்சீபுரத்தில் தோல்வி பயத்தில் ஏதேதோ உளறி இருக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்றவருக்கு இப்போது தோல்வி பயம் வந்து விட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி திடீர் என திறந்து விடப்பட்டது ஏன் என்று இப்போது பதில் அளித்து இருக்கிறார். 347 பேர் சாவுக்கு காரணமான செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி தி.மு.க. கேள்வி கேட்டு, மக்கள் கேள்வி கேட்டு பதில் அளிக்காத ஜெயலலிதா இப்போது தேர்தல் பிரசாரத்தின்போது மக்களை சந்திப்பதால் பொய்களை பேசி வருகிறார்.

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி கடலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் அந்த நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறாத, அவர்களது குறைகளை கேட்காத ஜெயலலிதா இப்போது நேரில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

கடந்த 14-11-2015 அன்று போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அதிக மழை என்றால் இதுபோன்ற சேதம் தவிர்க்க முடியாதது என மனசாட்சியை விற்று விட்டு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. டிசம்பர் 1-ந்தேதி வெள்ள ஆபத்து ஏற்பட்டது. ஆனால் டிசம்பர் 13-ந்தேதி தான் தலைமை செயலாளர் வெள்ள சேதத்திற்கான காரணம் பற்றி பேட்டி அளித்தார். ஆட்சியாளர்களின் தவறை மறைப்பதற்காக தான் இத்தனை நாள் அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

347 பேர் மரணத்திற்கு காரணமான செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக நான் ஜெயலலிதாவுக்கு ஒரு சவால் விடுகிறேன். இந்த சவாலை ஏற்க கூடிய தெம்பு, திராணி ஜெயலலிதாவுக்கு உண்டா? நான் ஆதாரத்துடன், சாட்சியுடன் தான் பேசுகிறேன். ஜெயலலிதாவுக்கு தெம்பு, திராணி இருந்தால் என் மீது வழக்கு போடட்டும் அதனை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். சி.பி.ஐ. விசாரணைக்கு விடுவாரா? நான் ரெடியாக இருக்கிறேன். அவர் ரெடியா?

கடந்த 10-ந்தேதி தி.மு.க. தேர்தல் அறிக்கையை தலைவர் கருணாநிதி வெளியிட்டார். அது வெறும் தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, பொக்கிஷம் போன்றது. 501 வாக்குறுதிகள் அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 1974-ம் ஆண்டு மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டவர் கருணாநிதி.

ஆனால் 29-11-2003 அன்று மது விற்பனைக்கு ஆதரவாக கையெழுத்திட்டவர் தான் ஜெயலலிதா. எனவே படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவேன் என சொல்லும் யோக்கியதை ஜெயலலிதாவுக்கு கிடையாது. 5 வருடமாக ஆட்சியில் இருந்த ஜெயலலிதா மதுவிலக்கை ஏன் படிப்படியாக அமல்படுத்தவில்லை.

மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்படும் என்றாலே அது பூரண மதுவிலக்கை தான் குறிக்கும். கடந்த 1937-ம் ஆண்டு ராஜாஜி பூரண மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வந்த போது அந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937’ என்று தான் பெயர். அதனால் நீங்கள் (ஜெயலலிதா) கவலை படவேண்டாம். மது விலக்கு என்றாலே பூரண மது விலக்கு தான். எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →