ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரியுங்கள் – கம்யூனிஸ்டுகளுக்கு ஸ்டாலின் அழைப்பு.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் யார் போட்டியிட வாய்ப்பு உள்ளது?
பதில்:-தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நாளை அவர்களை அழைத்து நேர்காணல் நடத்த இருக்கிறோம். அதன் பிறகு கலைஞர், மற்றும் பேராசிரியருடன் கலந்து பேசி நாளை அல்லது நாளை மறுநாள் தி.மு.க. வேட்பாளரை அறிவிப்போம்.
கே:-தி.மு.க.வுக்கு எந்தெந்த கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன?
ப:-ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கே:-எதிர்க்கட்சிகள் வாக்குகள் சிதறாமல் இருக்க கம்யூனிஸ்டு மற்றும் மக்கள் நல கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவீர்களா?
ப:-நீங்கள் சொல்லும் கருத்து ஏற்புடையதுதான். அதுவும் குறிப்பாக சசிகலா தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு பினாமி ஆட்சி நடக்கிறது. எனவே ஜனநாயகம் காப்பாற்றப்பட பினாமி ஆட்சிக்கு பாடம் புகட்ட ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நீங்கள் கேட்பதுபோல் கம்யூனிஸ்டு கட்சியானாலும், வேறு கட்சியாக இருந்தாலும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி ஆதரவு தெரிவித்தால் அதை வரவேற்க தி.மு.க. தயாராக உள்ளது. நீங்கள் கேட்ட கேள்வி மூலமாகவே இதை அவர்களுக்கு அழைப்பாக விடுக்கிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நியாமாக தேர்தல் நடத்த கமிஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும்.
நாளை நடைபெறும் ரேஷன் கடை போராட்டத்தால் அரசு விழித்தெழ வேண்டும். இல்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.