Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Stalin hits back at BJP leader Pon Radhakirhsnan

By   /  March 6, 2017  /  Comments Off on Stalin hits back at BJP leader Pon Radhakirhsnan

    Print       Email

பொன்.ராதா கிருஷ்ணனின் திமுக மீதான விமர்சனம் விரக்தியின் வெளிப்பாடு: ஸ்டாலின் தாக்குDeccan Abroud10

பாஜகவை தமிழகத்தில் வளர்க்க முடியாமல் வேதனையின் விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு பொன்.ராதா கிருஷ்ணன் விமர்சனங்களை முன்வைக்கிறார் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் திமுக அழிந்து வருகிறது என்ற நோக்கில் பேசியிருக்கிறார். அதுகுறித்து கூறுங்கள் என்று நிருபர் ஒருவர் கேட்க, “இதுதொடர்பாக கொளத்தூரில் அவர் கூறும்போது, “பொன்.ராதாகிருஷ்ணன் எவ்வளவு முயன்றாலும் அவருடைய கட்சியை வளர்ப்பதற்கு தமிழகத்தில் முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வேதனையின் விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு இதுபோன்ற கருத்துகளை அவர் பேசிக்கொண்டிருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் அரசியலில் முகவரி இல்லாத அநாதைகளாக ஆக்கப்பட்டிருக்கும் நிலை தான் தமிழகத்தில் இருக்கிறது. அதற்கு பல சான்றுகளும் உண்டு.

குறிப்பாக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரை சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், மேலாதிக்கம் கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி, அந்தக் கட்சியிலே இன்றைக்கு அவர் ஒரு அமைச்சராக வந்திருக்கிறார் என்று சொன்னால் அதற்கு பின்னணி திராவிட இயக்கம் தான் என்பதை அவர் மறந்துவிட மாட்டார், அப்படி மறந்திருந்தால் அவருக்கு அதை நான் நினைவுப்படுத்துகிறேன்” என்றார்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →