எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படும் சிவப்பு விளக்கு சைரன் பொருந்திய கார் ; வேண்டாம் என்று நிராகரித்தார் ஸ்டாலின்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சருக்கு வழங்கப்படும் அந்தஸ்து போல், சிவப்பு விளக்கு சைரன் பொருத்திய அரசு கார் மற்றும் 2 ஓட்டுனர்களை வழங்குவார்கள்.
ஆனால் மு.க.ஸ்டாலின் அரசு வழங்கிய காரை வேண்டாம் என்று கூறி விட்டார். தனது சொந்த காரையே பயன்படுத்தி கொள்வதாக சட்டசபை செயலக அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டார்.
சட்டசபையில் தி.மு.க.வுக்கு 89 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் இதற்கு முன்பு ஒதுக்கிய அறையை விட இப்போது விசாலமான அறை தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு புதிதாக மேஜை நாற்காலிகளும் போடப்பட்டுள்ளது.
இதே போல் காங்கிரஸ் கட்சிக்கு 8 உறுப்பினர்கள் உள்ளதால் அவர்களுக்கு சிறிய அளவிலான அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதே போல் பெண் எம்.எல்.ஏ.க்கள் அமருவதற்கும் டீ சாப்பிடுவதற்கும் வசதியாக தனி அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வந்து சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்லும் வகையில் தனியாக ஒரு அறையும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.