Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Stalin  requests party cadres : Don’t  celebrate my Birthday.

By   /  February 23, 2016  /  Comments Off on Stalin  requests party cadres : Don’t  celebrate my Birthday.

    Print       Email

30THPG-2PROMOSTALI_1702867eஇந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்- ஸ்டாலின் வேண்டுகோள்.

நான் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. எனவே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்று தி.மு.க.வினருக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

InCorpTaxAct
Suvidha

இதுகுறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் மீது பேரன்பு கொண்ட தி.மு.க. தொண்டர்களும், இளைஞரணியினரும் மார்ச் 1-ந் தேதி என்னுடைய பிறந்தநாள் என்பதால் இப்போதே அதற்கான விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்து வருவதை அறிகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல தி.மு.க.வினர் எனது பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்யும்போது, ஆடம்பர நிகழ்ச்சிகள் கூடாது என்பதையும் குறிப்பாக பேனர்கள்-கட் அவுட்டுகள்-போஸ்டர்கள் போன்ற விளம்பரங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாக்களாக நடத்தும்படி கேட்டுக்கொள்வது என் வழக்கமாக இருக்கிறது.

தி.மு.க. தொண்டர்களும் இளைஞரணியினரும் அதனைக் கடைப்பிடித்து மக்களுக்கான ஆக்கப்பூர்வப் பணிகளை மேற்கொள்ளும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் தங்கள் உடமைகளை இழந்து, தொழில் நஷ்டம் ஏற்பட்டு, பல நூறு பேர் உயிரிழந்த சூழல் என்னை மிகவும் பாதித்துவிட்டது. ஆகவே நான் இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை.

எனவே மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை இன்னும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொருவரும் வீடுவீடாகச் சென்று, தி.மு.க.வே தமிழக மக்களின் காவல் அரண் என்பதை எடுத்துச் சொல்லவேண்டும்.

தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுவதே, என் மீது பேரன்பு கொண்டுள்ள தொண்டர்களும், இளைஞரணியினரும் வழங்கும் அன்பு பரிசாகும்.

அந்தப் பரிசை நீங்கள் அள்ளி வழங்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பிறந்தநாள் அன்று நான் சென்னையில் இருக்கப்போவதில்லை என்பதால் தி.மு.க.வினர் யாரும் என்னை சந்திக்க முயற்சி செய்யவேண்டாம் என்றும் தத்தம் பகுதிகளில் நான் கேட்டு கொண்டவாறு பிரசாரத்தில் ஈடுபடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →