Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

‘Still I am the glamour queen’- Says Nameetha.

By   /  April 15, 2016  /  Comments Off on ‘Still I am the glamour queen’- Says Nameetha.

    Print       Email

nameetha_2815220gஇன்னமும் நான்தான் ‘கிளாமர் குயின்– சொல்கிறார் நமீதா.

முன்பு இருந்ததை விடவும் மிகவும் மெலிந்து சிக்கென்று இருக்கிறார் நமீதா. மீண்டும் திரையுலகில் இறங்கி ஒரு பெரிய ரவுண்ட் வலம் வருவோம் என்ற நம்பிக்கை முழுமையாக அவரிடம் இருக்கிறது. அவரே கூறுகிறார்.

InCorpTaxAct
Suvidha

“தமிழ் சினிமாவுக்கு நான் வந்தபோது மிகச் சரியான தோற்றத்தில் இருந்தேன். கடந்த 12 வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று ஐம்பது படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் தமிழ் மக்கள், முக்கியமாக ரசிகர்களாகிய என் ‘மச்சான்கள்’ என் மீது காட்டிய அன்புதான் இதற்குக் காரணம். சமீபத்தில் சேலம் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கே அரை மணிநேரத்தில் இருபதாயிரம் ரசிகர்கள் திரண்டு எனக்குக் கொடுத்த வரவேற்பால் திக்குமுக்காடிப்போனேன். நிபந்தனையற்ற இவர்களது அன்பின் காரணமாகவே என் எடை கூடியிருக்க வேண்டும். உடல் எடை கூடிய தோற்றத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.

ஒரு கட்டத்தில் “‘ஒபிசிட்டி’ என்ற எல்லைக்குள் நுழைந்துவிடாதீர்கள்; அது மிக ஆபத்தானது. தற்போது உங்கள் உயரம்தான் ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறது” என்று மருத்துவர் என்னை எச்சரித்தார். இதுதான் நான் உடல் எடையைக் குறைக்க முக்கியமான காரணம். தற்போது 21 கிலோ எடையைக் குறைத்து, இடுப்பின் சுற்றளவில் 10 அங்குலம் குறைத்திருக்கிறேன். நான் நடிக்க வரும்போது எப்படியிருந்தேனோ அப்படி மாறிவிட்டேன்.

இதற்கு, கடந்த எட்டு மாதங்களாக தினசரி 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. தேவையான அளவு எடையைக் குறைத்துவிட்டதால் உடற்பயிற்சிக்கான நேரத்தை 4 மணிநேரமாக முதலில் குறைத்தேன் தற்போது தினசரி 2 மணிநேரமாகக் குறைத்துவிட்டேன். எனது உணவுமுறையும் தலைகீழாக மாறிவிட்டது. விருப்பமான உணவுப் பொருட்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டுக்கொள்கிறேன். என் உயரத்துக்கு ஏற்ற எடைக்குத் திரும்பிய பிறகு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை என்னால் வர்ணிக்க முடியவில்லை.

தற்போது உங்கள் திட்டம் என்ன? கதாநாயகியாகத் தொடர்வதா அல்லது உங்கள் சக நடிகர் நண்பர் சத்யராஜ் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பதுபோல் நீங்களும் களமிறங்கலாம் என்று நினைக்கிறீர்களா?

இப்போதைக்கு கேரக்டர் ரோல்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. கதாநாயகி அல்லது இரண்டாவது கதாநாயகியாக நடிக்க விரும்புகிறேன். சத்யராஜ் சாருக்குக் கிடைப்பது போன்ற அற்புதமான கேரக்டர் ரோல்கள் என்னைப் போன்ற நடிகைகளுக்குத் தமிழ் சினிமாவில் என்றில்லை, இந்தியா சினிமா முழுக்கவே கிடைப்பதில்லை என்பதுதான் ரியாலிட்டி. இல்லாத ஒன்றைப் பற்றி ஏன் நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் மீது படிந்திருக்கும் க்ளாமர் குயின்இமேஜ் மீது இன்னும் அழுத்தமான நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது?

நான் நம்புகிறேன்… முழுமையான க்ளாமர் குயின் நான் மட்டும்தான்! ரசிகர்களுக்கு என் க்ளாமர் தோற்றம் மீது எவர்க்ரீன் ஈர்ப்பு இருக்கிறது. நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எனது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். எல்லோராலும் க்ளாமர் பண்ண முடியாது. என் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. க்ளாமர் காட்டினால் அது பார்வைக்கு உறுத்தாமல் இருக்க வேண்டும். நான் க்ளாமராக நடித்தால் வல்கராகத் தெரியவில்லை என்பது என் பெண் ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கிறது. நான் ரசிகர்களைச் சந்திக்கும்போது வெறுமனே அவர்களோடு கைகுலுக்கிவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிடுவதில்லை. அவர்களுடன் உரையாடுவது பிடிக்கிறது. அப்போது என் க்ளாமர் பற்றி எனது மச்சான்கள் கவிதையே படிப்பார்கள். நானொரு கவிஞர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ட்விட்டர் இன்னும் சிறந்த உரையாடல் களத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. தற்போது முற்றாக என் பழைய தோற்றத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில் நான் கதாநாயகியாக நடிப்பதுதானே சரியாக இருக்க முடியும்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →