Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Story is the Hero in films – Says Surya.

By   /  May 7, 2016  /  Comments Off on Story is the Hero in films – Says Surya.

    Print       Email

24movie_432016_7பல படங்களுக்குக் கதைதான் ஹீரோ –  நடிகர் சூர்யா சொல்கிறார்.

சில நேரங்களில் நான் சாதாரணமான கதைகளையும் தேர்வு செய்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் என் நலன் விரும்பிகள் திருப்தி அடையவில்லை. எனவே கமர்ஷியல் ரீதியாகவும் ஹிட்டாகக் கூடிய அதே வேளையில் நல்ல கதையும் கொண்ட படங்களில் நடிப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால், அதற்காக எப்போதுமே சிக்கலான கதைகளில் மட்டுமே தேர்வு செய்வேன் என்று அர்த்தமில்லை. சில எளிமையான கதைக்களம் கொண்ட ‘பசங்க-2′, ’36 வயதினிலே’ போன்ற படங்களையும் செய்வேன். நட்சத்திரம் – நடிகர் என்ற பாகுபாடெல்லாம் எனக்குக் கிடையாது. இது வெறும் பொழுதுபோக்கு. ஒரு நடிகராக மட்டுமே கதையைக் கேட்டால் நீங்கள் சுயநலத்தோடு முடிவெடுக்க வேண்டியிருக்கும். அதுபோல் ஒரு நட்சத்திரமாக மட்டுமே கதையை அணுகினால் வேறு எதையும் கவனிக்காமல் நட்சத்திர அந்தஸ்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும்.

InCorpTaxAct
Suvidha

 

படத்தயாரிப்பு, விநியோகிஸ்தம் செய்வதில் உள்ள சவால்கள் குறித்து எனக்கு அச்சமில்லை. நான் எப்போதுமே பணத்தை பற்றி கவலைப்பட்டதில்லை. ஒரு படத்தில் பணத்தை இழந்தால் அடுத்த படத்தில் அதை அடைந்துவிடலாம். ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தில் கிடைக்கும் லாபத்தை அடுத்த படத்திற்கான முதலீடாகவே பார்ப்பார். ஒரு நடிகனாக நான் என் நேரத்தை முதலீடு செய்திருக்கிறேன். அதற்காக என்ன கிடைத்தாலும் எனக்கு லாபமே. ஒரு நல்ல திரைப்படத்தை தயாரித்த பெருமிதம் எனக்கு இருக்கும்

ஒரு படத்தின் நிஜ ஹீரோ அப்படத்தின் கதைதான். எனவே பல நட்சத்திரங்களோடு இணைந்து மல்டி ஸ்டாரர் திரைப்படங்களில் நடிப்பது தவறல்ல. மல்டி ஸ்டாரர் திரைப்படத்துக்கான அப்படிப்பட்ட நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

’சிங்கம் 3’ படத்தில் முதல் இரண்டு பாகங்களின் சிறப்பம்சங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தது. முதல் பாகம் செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. இரண்டாவது பாகத்தில் ஆக்‌ஷன் அதிகமாக இருந்தது. ’சிங்கம் 3’ல் இரண்டுமே கலந்திருக்கும்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →