Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Students  protest  in  support  of  Rohit Vemula : Rahul Gandhi,  Kejriwal  participates.

By   /  February 23, 2016  /  Comments Off on Students  protest  in  support  of  Rohit Vemula : Rahul Gandhi,  Kejriwal  participates.

    Print       Email

Rahul-students_2748228fரோகித் வெமுலாவுக்கு ஆதரவாக டெல்லியில் மாணவர் பேரணி; ராகுல் காந்தி, கேஜ்ரிவால் பங்கேற்பு.

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

InCorpTaxAct
Suvidha

பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார். இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் பதவி விலக கோரி போராட்டம் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கோரி தலைநகர் டெல்லியில் இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நடைபெற்ற பேரணியை ஐதராபாத் மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் முன்னின்று தலைமை தாங்கினர். இருப்பினும் நாடுமுழுவதும் இருந்து பல்வேறு மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் தேச விரோத முழக்கங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகி சிறையில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் Kejri-rohith_2748235fஆத்மி தலைவர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ராகுல்காந்தி பேசியதாவது:-

பா.ஜ.க., தலைமையிலான மத்திய அரசு எதிர்ப்பு குரல்களை நெரிக்கிறது. இளம் மாணவர்களின் கருத்துக்களை கேட்க அரசு தயாராக இல்லை.

மக்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்கும் நாடு நமக்கு தேவை. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., தங்களது கருத்தினை மட்டும் திணிக்க விரும்புகிறது. அரசு தலித்கள் மற்றும் பழங்குடியின மக்களை ஒடுக்குகிறது.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் கருத்து சுதந்திரத்தை நெரிக்காத அளவிற்கு நமக்கு சட்டங்கள் தேவை. அதேபோல், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சட்டம் வகுக்க வேண்டும் என்று ஐதராபாத் சென்றபோது நான் வலியுறுத்தினேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →