Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Students suffer & Commits suicide because they cannot pay Education loan : Stalin’s Speech

By   /  August 3, 2016  /  Comments Off on Students suffer & Commits suicide because they cannot pay Education loan : Stalin’s Speech

    Print       Email

201608030734437266_Students-suffer-suicidal-mood-because-they-can-not-pay_SECVPFகல்விக்கடனை செலுத்த முடியாததால் மாணவர்கள் தற்கொலை செய்யும் மனநிலையில் தவிக்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு

கோவை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா கோவை கோல்டுவின்ஸ் அவினாசி ரோடு ஏ.பி. திருமணமண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.

InCorpTaxAct
Suvidha

விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

1989-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தந்தார். 2006-ம் ஆண்டு 5-வது முறையாக அவர் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் நேரத்தில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றினார். குறிப்பாக விவசாய கூட்டுறவு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினார். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதியில் கூறினார்கள். ஆனால் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை.

ஆகவே நான், சட்டமன்றத்தில் எவ்வளவு கடன் தள்ளுபடி என்பதை இணையதளத்தில் வெளியிடகேட்டேன். அப்போது தானே மக்கள் புரிந்து கொள்வார்கள். அதற்கு அமைச்சர் மழுப்பலான பதிலைத்தான் சொல்கிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. கலைஞர் தேர்தல் பிரசார கூட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி, அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அவர் ஆட்சிக்கு வந்திருந்தால் நிறைவேற்றி தந்து இருப்பார்.

மாணவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் படிப்பதற்கு வாங்கிய கல்விக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று அறிவித்திருந்தோம். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. வந்திருந்தால், அதனையும் நிறைவேற்றி இருப்போம். ஆனால் இப்போதைய ஆட்சி அதனை செய்ய முன்வரவில்லை. அதனால்தான் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த மாணவன் லெனின், வங்கியில் வாங்கிய கல்விக்கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

இப்படி பல மாணவர்கள் கல்விக்கடனை செலுத்த முடியாததால், தற்கொலை செய்யும் மனநிலையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் இந்த அரசு உணர்கிறதா? ஆட்சிக்கு வருகிறவர்கள் மக்களின் மனதை அறிந்து, புரிந்து, அவர்களுக்கு கடமையாற்ற வேண்டும்.

மேலும் தற்போது சட்டம், ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் தான் செய்திகளாக வருகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அதுவும் எம்.பி.யாக இருக்கிற பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை. அதுவும் முதல்- அமைச்சரிடத்திலே அவருக்கு பாதுகாப்பு இல்லை. அனைத்து கட்சி தலைவர்கள் இடம்பெறும், சட்டத்தை இயற்றும் நாடாளுமன்றத்திலே இதனை அவர் பேசி உள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பேச முயன்ற போது சபாநாயகர் அனுமதிக்கவில்லை. நியாயமாக இதனை அனுமதித்து இருக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா பிரச்சினையில் என்ன நடந்தது என்பது குறித்து, முதல்- அமைச்சர் அல்லது மூத்த அமைச்சர்கள் விளக்கி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை. ஆகவே தமிழகத்தை காப்பாற்ற கலைஞரை விட்டால், தி.மு.க.வை விட்டால் நாதியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →