Loading...
You are here:  Home  >  Deccan Abroad  >  Current Article

Sub Junior Basketball Tournament :Priyanka’s Daughter Team Defeated

By   /  February 2, 2016  /  Comments Off on Sub Junior Basketball Tournament :Priyanka’s Daughter Team Defeated

    Print       Email

பிரியங்கா மகள் பங்கேற்ற கூடைப்பந்து அணி தமிழ்நாட்டு அணியிடம் தோல்வி.priyanka-gandhi-full

அகில இந்திய சப்–ஜூனியர் கூடைப்பந்து போட்டி புதுவையில் தொடங்கி வருகிற 8–ந் தேதிவரை நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 20 அணிகள் பங்கேற்கின்றன.

InCorpTaxAct
Suvidha

இந்த போட்டியில் அரியானா அணியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் பேத்தியும், பிரியங்காவின் மகளுமான மிரயா வதேரா கலந்து கொண்டு விளையாடுகிறார்.

மிரயா வதேராவுடன் தாயார் பிரியங்கா, சகோதரர் ரேகன் வதேரா ஆகியோர் புதுவை வந்துள்ளனர். அவர்கள் புதுவை கடற்கரையில் பழைய கோர்ட்டு அருகே உள்ள ஓட்டலில் தங்கி உள்ளனர்.

நேற்று இரவு 8.45 மணிக்கு அரியானா அணிவீராங்கனைகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில் மிரயா வதேரா கலந்து கொண்டார்.

மிரயா வதேரா இடம் பெற்ற அரியானா அணி ஏ பிரிவில் இருந்தது. இந்த பிரிவின் முதல் ஆட்டம் இன்று காலை நடந்தது. இதில் மிரயா வதேரா கலந்து கொண்டு ஆடினார்.

இதற்காக காலை 10.15 மணிக்கு மிரயா வதேரா மைதானத்துக்கு வந்தார். அவருடன் 2 பெண்களும் வந்தனர். பிரியங்கா மைதானத்துக்கு வரவில்லை.

மிரயா வதேரா சக வீராங்கனைகளுடன் சேர்ந்து முதலில் ‘வாம்–அப்’ பயிற்சியில் ஈடுபட்டார்.

10.45 மணிக்கு போட்டி தொடங்கியது. அரியானா அணியுடன் தமிழக அணி மோதியது. அதில் மிரயா வதேரா விளையாடினார். போட்டி 40 நிமிடங்கள் நடத்த நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நேரத்தை 4 ஆக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 10 நிமிடங்கள் ஒதுக்கி போட்டியை நடத்தினார்கள்.

முதல் 10 நிமிட போட்டியில் மிரயா வதேரா பங்கேற்கவில்லை. 2–வது 10 நிமிட போட்டியில் அவர் விளையாடினார்.

முதலில் சற்று பயத்துடன் விளையாடிய அவர், நேரம் செல்ல செல்ல உற்சாகமாக விளையாடினார்.

தமிழக அணியினர் கடத்தி வந்த பந்தை லாவகமாக தட்டி பறித்து தனது அணி வீராங்கனைகளுக்கு கொடுத்தார். பல தடவை தமிழக அணியினர் புள்ளிகள் எடுக்க விடாமலும் தடுத்தார். அதே நேரத்தில் தனது அணியினர் புள்ளிகள் எடுக்கும் வகையில் பந்தை அவர்கள் கைக்கு தள்ளி விட்டார். மிரயா வதேரா ஆட்டத்தை ரசித்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் குரல் எழுப்பினார்கள்.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக அணியின் கை ஓங்கி இருந்தது. முதல் 10 நிமிடத்தில் 27–6 என்ற கணக்கில் தமிழக அணி முன்னணியில் இருந்தது. 2–வது 10 நிமிடத்தில் 14–40 என்ற புள்ளிகளிலும், 3–வது 10 நிமிடத்தில் 35–48 என்ற புள்ளிகளிலும் தமிழக அணி முந்தி இருந்தது.

ஆட்ட முடிவில் 80–58 என்ற புள்ளி கணக்கில் தமிழக அணி வெற்றி பெற்றது. அரியானா தோல்வியை சந்தித்தது.

தனது அணி தோற்றாலும் மிரயா வதேரா சோகத்தை வெளிக்காட்டவில்லை. சிரித்தபடியே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மிரயா வதேரா விளையாடிய போது, டெல்லியில் இருந்து வந்திருந்த 20 சிறப்பு பாதுகாப்பு படையினர் முழு பாதுகாப்பையும் கவனித்தனர். அவர்கள் அனைவரும் சாதாரண உடையில் இருந்தனர். புதுவை போலீசார் மைதானத்துக்குள் செல்லவில்லை. அவர்கள் மைதானத்துக்கு வெளியே உள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மிரயா வதேரா விளையாடிய போது அவரை தவறான நோக்கத்தில் படம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த புகைப்பட நிபுணர்கள் அனைவரிடமும் முன் கூட்டியே பாதுகாப்பு படையினர் எச்சரித்து இருந்தனர். யாராவது தவறாக படம் எடுக்கிறார்களா? என அடிக்கடி கண்காணித்தபடி இருந்தனர்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →