சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பரபரப்பு நடிகைகள் தமன்னா, பூனம்பாஜ்வா சர்ச்சை வீடியோ வெளியானது
தினமும் நள்ளிரவில் இந்த படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதனால் சில நடிகர்–நடிகைகள் தங்களை பற்றிய படம் வெளியாகுமோ என்ற அச்சத்தில் தூக்கம் இன்றி தவிக்கிறார்கள்.
ரசிகர்களும் ஆபாச படங்களை பார்ப்பதற்காக சுசித்ராவின் டுவிட்டரே கதி என்று கிடக்கின்றனர். படங்கள் வெளியானதும் அவற்றை அவசர அவசரமாக பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப்களிலும் பரப்பி வருகிறார்கள். அனுயா, சஞ்சிதா ஷெட்டி பெயர்களில் வந்த நிர்வாண படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனுஷ், திரிஷா, ஹன்சிகா ஆகியோரின் படங்களும் வெளியாகி இருக்கின்றன.
டைரக்டர் செல்வராகவன் லீலை என்ற பெயரில் அவரும் ஆண்ட்ரியாவும் பேசுவது போன்ற உரையாடலும் வெளிவந்து இருக்கிறது. அமலாபால், பார்வதி நாயர் உள்ளிட்ட பல நடிகைகளின் படங்கள் தொடர்ந்து வெளிவரும். சினிமா உலகின் உண்மை முகம் தோலுரித்து காட்டப்படும் என்ற வாசகமும் சுசித்ரா டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது நடிகர்–நடிகைகள் மத்தியில் மேலும் பீதியை கிளப்பி விட்டுள்ளது.
இந்த நிலையில் சுசித்ரா, தனது டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ‘ஹேக்’ செய்து நடிகர்–நடிகைகள் படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்கள் என்று கூறினார். அத்துடன் டுவிட்டர் பக்கத்தையும் அவர் மூடி விட்டார். ஆனால் மீண்டும் சுசித்ரா பெயரில் புதிதாக டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அவற்றில் வீடியோக்களும் படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன
விருந்து நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் ‘ஒய் திஸ் கொலை வெறி’ என்ற பாடலை பாடுவது போன்றும் அதில் நடிகைகள் தமன்னா, பூனம்பாஜ்வா இருவரும் ஆடுவது போன்றும் சர்ச்சை வீடியோ வெளியாகி உள்ளது. இதில் நடிகர்–நடிகைகள் மது அருந்துவது போன்ற காட்சிகளும் உள்ளன.
டைரக்டர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகர் தனுஷ் தன்னை பற்றி வெளியான படங்கள் பற்றி அளித்துள்ள விளக்கத்தை வெளியிட்டு இருக்கிறார். ‘‘சுசித்ரா வெளியிட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து நடிகர் தனுசிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தனுஷ் ரஜினிகாந்தைப்போல் சிரித்து விட்டு, இதெல்லாம் ‘பப்ளிசிட்டி ஸ்டென்ட்’ வேறு எதுவும் இல்லை என்று என்னிடம் தெரிவித்தார்’’ என்று கூறியுள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.