பி.வி.சிந்துவுக்கு மணல் சிற்பம் எழுப்பி சுதர்சன் பட்நாய்க் பாராட்டு.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய சிந்துவுக்கு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் தனது சிற்பத்தால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பூரி கடற்கரையில் சுமார் 4 டன் மணலை பயன்படுத்தி, இவர் உருவாக்கியுள்ள இந்த சிற்பத்தில் சிந்து பேட்மிண்டன் விளையாடுவது போன்ற 5 அடி உயர உருவம் காணப்படுகிறது. அதன் கீழ்பகுதியில் சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்த் இடம்பெற்றுள்ளார்.
சிந்துவுக்கு இந்த மணல் சிற்பத்தின் மூலம் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், சிந்துவின் வெற்றிக்கு பின்னணியில் இருந்த உண்மையான கதாநாயகனான பயிற்சியாளர் கோபிசந்துக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என சுதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.