Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Sunrisers Hyderabad beat Kolkata Knight Riders.

By   /  May 26, 2016  /  Comments Off on Sunrisers Hyderabad beat Kolkata Knight Riders.

    Print       Email

Sunrisers-Hyderabad-players-led-by-captain-David-Warner1ஐ.பி.எல்: 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

InCorpTaxAct
Suvidha

இதனையடுத்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் யுவராஜ் சிங் அதிகபட்சமாக 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிகியூஸ் 31 ரன்கள் எடுத்தார்.

குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், மோர்கல் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுக்களை சாய்த்தனர். இதனையடுத்து 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஸ் குமார் 3 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

ஐதராபாத் அணியில் 2 விக்கெட்டுக்களையும், 31 ரன்களையும் எடுத்த ஹென்ரிகியூஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியின் மூலம் தொடரில் இருந்து கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. ஐதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் தகுதிச் சுற்று-2 ஆட்டத்தில் குஜராத்துடன் மோதுகின்றது.

அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி மே 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சந்திக்கிறது.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →