Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Supreme  Court directs JNU  students president  Kannaiah Kumar to approach HC for  Bail.

By   /  February 19, 2016  /  Comments Off on Supreme  Court directs JNU  students president  Kannaiah Kumar to approach HC for  Bail.

    Print       Email

KANHAIYA_KUMAR_2743295fஜாமீனுக்கு உயர்நீதி மன்றத்தை அணுகவும் – கண்ணையா குமாருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் உள்ளிட்ட 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், மாணவர் தலைவர் கண்ணையா குமார் தரப்பில் ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் அனிந்திதா புஜாரி தாக்கல் செய்த மனுவில், ‘கண்ணையா குமாரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால், விசாரணை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்ய அச்சப்படுகிறார். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று கண்ணையா குமார் ஜாமின் மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கினால் அது தவறானதொரு முன்னுதாரணமாகிவிடும். பாட்டியாலா கோர்ட்டுக்கு செல்வதில் பிரச்சனை இருந்தால் ஜாமின் கேட்டு டெல்லி ஐகோர்ட்டை அணுகலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

மேலும், கண்ணையா குமார் மற்றும் அவரது வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி ஐகோர்ட்டில் கண்ணையா குமார் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →