Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Supreme Court suspends arrest warrants against Vijayakanth and Premalatha. Issued notice to TN Govt.

By   /  July 28, 2016  /  Comments Off on Supreme Court suspends arrest warrants against Vijayakanth and Premalatha. Issued notice to TN Govt.

    Print       Email

premalatha1-647x450விஜயகாந்த் மற்றும் பிரேமலதா மீதான பிடிவாரண்டுகளை ரத்து செய்தது உச்சநீதி மன்றம். ‘எடுத்ததற்கெல்லாம் மக்கள் பணத்தில் அவதூறு வழக்குகளா?’ என்று மாநில அரசுக்குக் கேள்வி.

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ‘விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுப்பிரமணிய சாமி ஆகியோர் அவதூறு தொடர்பான குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுதாரர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் கீழ் கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பு அப்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இதே போன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் வழக்கு தொடர்வது சட்ட நடைமுறைக்கு ஏற்புடையது அல்ல என்றும், எனவே, மனுதாரர்கள் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில் விஜயகாந்த், பிரேமலதா மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் இரு தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடர்ந்து 4 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாத விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, டெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளரும், வக்கீலுமான ஜி.எஸ்.மணி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இது மிகவும் முக்கியமான வழக்கு, எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் மீதான பிடிவாரண்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

மேலும், ஜெயலலிதா தொடர்ந்த அவதுறு வழக்கு பட்டியலை 2 வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

“பழிவாங்கும் ஆயதமாக அவதூறு சட்டப்பிரிவை பயன்படுத்தக்கூடாது. அரசாங்கத்தை விமர்சிப்பது எப்படி அவதூறு வழக்காகும்? குடிமக்களை காக்க வேண்டியது நீதிமன்றங்களின் கடமை” என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →