எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவில்லை ; அகரம் அறக்கட்டளை ஆதரவு சர்ச்சை குறித்து சூர்யா விளக்கம்.
அரசியல் ஆதரவு குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு சூர்யாவின் அகரம் அறக்கட்டளை விளக்கம் அளித்திருக்கிறது.
சூர்யா தொடங்கி நடத்தி வரும் அறக்கட்டளை ‘அகரம்’. இதன் மூலமாக நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் சூர்யா.
தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மக்கள் நலக் கூட்டணிக்கு தான் அகரம் அறக்கட்டளை ஆதரவு அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இச்செய்திக்கு அகரம் அறக்கட்டளை விளக்கம் அளித்திருக்கிறது.
“சமூக வலைத்தளத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அகரம் அறக்கட்டளை தனிப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளிக்க சொல்லியிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
நாங்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள் என்பதையும், தேர்தல் நேரத்தில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்” என்று அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.