Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Surya’s  humanity saves two lives

By   /  April 6, 2016  /  Comments Off on Surya’s  humanity saves two lives

    Print       Email

சூர்யாவின் மனிதாபிமானம் இரண்டு உயிர்களைக் காப்பாற்றியது. 1

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய கணவன், மனைவியை  நடிகர் சூர்யா தனது காரில் ஏற்றிப்போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

InCorpTaxAct
Suvidha

சூர்யா எஸ்-3 என்ற படத்தில் நடித்துவருகிறார். சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாக இது தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மதனப் பள்ளியில் நடந்து வருகிறது. சித்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்து படப்பிடிப்புக்குப் போய் நடித்து வந்தார் சூர்யா. வழக்கம்போல் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு மாலையில் ஓட்டலுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது வழியில் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கிய கணவன்-மனைவி இருவர் உயிருக்குப் போராடியபடி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மோட்டார் சைக்கிள் சற்று தள்ளி சேதமடைந்து கிடந்தது. ஏதோ ஒரு வாகனம் அவர்களை இடித்துவிட்டுச் சென்றதால் இந்த விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது.

சூர்யா இருவரைப் பார்த்ததும் காரை நிறுத்தி ஓடோடிச் சென்றார். தனது உதவியாளர் மற்றும் டிரைவரையும் அழைத்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன் மனைவியை தூக்கிப்போய்த் தனது காரில் ஏற்றினார். அவர்களை சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பெண்ணுக்கு பலத்த அடிபட்டு இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் சூர்யாவிடம் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சை வசதி திருப்பதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறது என்றும் கூறினார்கள். சூர்யா உடனடியாக நகரியில் வசிக்கும் நடிகை ரோஜாவைத் தொடர்பு கொண்டு திருப்பதி ஆஸ்பத்திரியில் உள்ள குறிப்பிட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படிக் கூறினார்.

ரோஜாவும் டாக்டரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்தார். பின்னர் சூர்யா தனது சொந்தச் செலவில் ஆம்புலன்ஸ் வேன் ஏற்பாடு செய்து கணவன் மனைவியைத் திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கிய கணவன் மனைவிக்காக ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர் ஆஸ்பத்திரியிலேயே இருந்துவிட்டு பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →