Loading...
You are here:  Home  >  Politics  >  Delhi Politics  >  Current Article

Sushma visit Sri Lanka, Expected to sort out fishermen issues

By   /  February 6, 2016  /  Comments Off on Sushma visit Sri Lanka, Expected to sort out fishermen issues

    Print       Email

வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கை செல்கிறார். மீனவர் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென்று எதிர்பார்ப்பு.bjp-slams-jdu-minister-for-making-fun-of-sushma-swaraj_080814104433

வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். அப்போது தமிழக மீனவர் பிரச்சினை உள்பட பல்வேறு விஷயங்களை பேசுகிறார்.

InCorpTaxAct
Suvidha

வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) 2 நாள் பயணமாக இலங்கை செல்கிறார். கொழும்பு நகரில் இன்று நடைபெறும் 9-வது இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீராவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பொருளாதாரம், வர்த்தகம், மின்சாரம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக, கலாசாரம், கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், ராணுவ ஒத்துழைப்பு, சுகாதாரம், விமான போக்குவரத்து, சுற்றுலா, இருநாட்டு மக்களின் தொடர்புகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இதற்கு முன்பு இரு நாட்டு கூட்டுக்குழு கூட்டம் 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டுக்குழு 1992-ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை வளர்க்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உருவாக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே மற்றும் உயர்மட்ட தலைவர்களையும் சந்தித்து விரிவாக பேசுகிறார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசுகிறார்.

முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-இலங்கை இடையேயான உறவுகள் சரிவடையும் நிலையில் இருந்தது. ராஜபக்சே சீனாவுடன் நெருக்கமாக இருந்ததால், சீனா இலங்கையில் பல கட்டமைப்பு பணிகளை செய்து கொடுத்தது.

ராஜபக்சே ஆட்சி தோற்கடிக்கப்பட்டதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றார். அதனைத் தொடர்ந்து இலங்கையுடன் நல்லுறவு தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →