Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Swathi murder case: One day police custody for Ramkumar

By   /  July 29, 2016  /  Comments Off on Swathi murder case: One day police custody for Ramkumar

    Print       Email

Ramkumar_2930791fசுவாதி கொலை வழக்கு: ராம்குமாருக்கு ஒருநாள் போலீஸ் காவல்

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஏற்கனவே போலீஸ் காவலில் விசாரணை நடந்துள்ளது.

InCorpTaxAct
Suvidha

இந்தநிலையில் ராம்குமாரிடம் மேலும் ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு எழும்பூர் 14-வது கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு இன்று மாஜிஸ்திரேட்டு கோபிநாத் (பொறுப்பு) முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு ராம்குமார் தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணையின் முடிவில் வரும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அன்று ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு கோபிநாத் அனுமதி வழங்கினார்.

போலீஸ் காவல் விசாரணையின்போது ராம்குமாரின் கையெழுத்தையும், கண்காணிப்பு கேமராவில் அவரது உருவம் பதிவான காட்சிகளையும் ஒப்பிட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →