Loading...
You are here:  Home  >  Business News  >  Current Article

Swathi murder case Ramkumar taken to Chennai.

By   /  July 4, 2016  /  Comments Off on Swathi murder case Ramkumar taken to Chennai.

    Print       Email

chennai-techie-murderer-759சுவாதி கொலையாளி ராம்குமார் சென்னை கொண்டுபோகப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை என்ஜினீயர் சுவாதி கொலையில், குற்றவாளி ராம்குமார் வெள்ளிக்கிழமை இரவு பிடிபட்டான்.

InCorpTaxAct
Suvidha

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தன் சொந்த கிராமமான மீனாட்சிபுரத்தில் பதுங்கி இருந்த அவனை போலீசார் பிடித்தனர். போலீசாரை கண்டதும் கொலையாளி ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான். இதனால் அவனுக்கு நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கழுத்தில் அவனுக்கு 18 தையல் போடப்பட்டுள்ளது. தற்போது அவன் பழைய நிலைக்கு வந்துள்ளான். இதனால் அவனை நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து நேற்று மதியம் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ், ராம்குமார் சிகிச்சை பெற்று வந்த  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ராம்குமாரை சென்னை கொண்டு செல்ல போலீசாருக்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து ராம்குமாரை சென்னை கொண்ட வர ஏற்பாடுகள் மேற்கொள்ப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை என்ஜினீயர் சுவாதி கொலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளி ராம்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான்.

இதற்காக 108 ஆம்புலன்சு வாகனம் ஒன்றில் டிரைவர் மற்றும் உதவியாளருடன் ராம்குமாருடன் செல்ல காது, மூக்கு, தொண்டை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரும் உடன் வந்தார்கள்.

சென்னையில் ராம்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை சென்னை எழும்பூர் குற்றவியல் பெருநகர நீதிமன்றத்தில் ராம்குமாரை ஆஜர்ப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, ராயப்பேட்டை மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →