Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

T.T.V.Dinakaran appeared before Delhi Police in connection with Two leaves symbol case.

By   /  April 22, 2017  /  Comments Off on T.T.V.Dinakaran appeared before Delhi Police in connection with Two leaves symbol case.

    Print       Email

dinakaran-tnசின்னம் பெற 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு. டெல்லி போலீசார் முன்பு டிடிவி தினகரன் ஆஜர்.

 

InCorpTaxAct
Suvidha

 

இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.முக. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ரூ.10 கோடியை முன் பணமாக இடைத் தரகர் சுகேஷ் சந்திர சேகருக்கு கொடுத்ததாக டெல்லி போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து டெல்லி ஓட்டலில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ. 1 கோடியே 30 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தில், “இரட்டை இலையை பெற்றுத் தர டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசினார்” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டான். அதன் பேரில் டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ. 50 கோடி பேரம் விவகாரத்தில் என்ன நடந்தது? யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை அறிய தரகர் சுகேசை டெல்லி போலீசார் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவனை போலீசார் டெல்லியில் சில இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று சுகேசை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அடுத்தக்கட்டமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.

201704221534307386_dinakan2._L_styvpfஇந்த நிலையில் இந்த வழக்கின் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் டி.டி.வி. தினகரனையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் வழங்க கோர்ட் டில் அனுமதி பெறப்பட்டது. மேலும் அவர் வெளி நாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் உஷார் படுத்தப்பட்டன.

இதனால் டெல்லி போலீசார் சென்னை வரும்போது டி.டி.வி.தினகரன் கைது செய்யப்படலாம் என்று தக வல்கள் வெளியானது. இதற்கிடையே கடந்த புதன்கிழமை டெல்லியில் இருந்து சம்மனுடன் போலீசார் சென்னை புறப்பட்டு வந்தனர்.

டெல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் மற்றும் போலீசார் அந்த சிறப்பு படையில் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சம்மனை வழங்கினார்கள்.

பிறகு டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் சிறிது நேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக விசாரணைக்கு டெல்லிக்கு வர வேண்டும் என்றனர்.

அதற்கு டி.டி.வி.தினகரன், எப்போது வேண்டுமானாலும் நான் டெல்லி வர தயாராக இருக்கிறேன்” என்றார். இதைத் தொடர்ந்து இடைத்தரகர் சுகேசிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணை நடக்க இருப்பதாகவும், எனவே சனிக்கிழமை டெல்லிக்கு வாருங்கள் என்றும் தெரிவித்தனர். அதை டி.டி.வி.தினகரன் ஏற்றுக் கொண்டார்.

என்றாலும் விசாரணைக்கு ஆஜராவதை சற்றுத் தள்ளிப்போட அவர் நினைத்தார். எனவே ஆஜராக அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் டெல்லி போலீசார் அதை ஏற்க வில்லை.

தினகரன் சனிக்கிழமை விசாரணைக்காக ஆஜராகா விட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீஸ் உதவி கமி‌ஷனர் சஞ்சய் ஷெராவத் நேற்று கூறினார். இதனால் தினகரன் இன்று ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதையடுத்து டெல்லி செல்வதற்காக இன்று காலை 8.15 மணிக்கு அவர் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசுகையில், “டெல்லியில் நடக்கும் விசாரணைக்காக புறப்பட்டுச் செல்கிறேன். விசாரணை முடிந்ததும் உங்களை நான் வந்து சந்திக்கிறேன்” என்றார்.

பிறகு 9.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்ற அவர், மதியம் டெல்லி சென்று சேர்ந்தார். இன்று பிற்பகல் அவர் டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் ஆஜரானார். ரூ.50 கோடி பேரம் தொடர்பாக கைப்பற்றியுள்ள ஆவணங்களைக் காட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கு தினகரன் பதிலளித்தார். இந்த விசாரணையின் முடிவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் முடிவு எடுக்க உள்ளனர்.

தினகரனிடம் விசாரணை நடந்ததையொட்டி டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. பத்திரிகை, தொலைக் காட்சி நிருபர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →