Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

T20 Pakistan team arrived in India.

By   /  March 12, 2016  /  Comments Off on T20 Pakistan team arrived in India.

    Print       Email

276c0423-de9d-4baf-aadf-81d542948183_S_secvpfடி 20 விளையாட பாகிஸ்தான் அணி இந்தியா வந்தடைந்தது.

ஆறாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இமாச்சலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

InCorpTaxAct
Suvidha

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை தர்மசாலாவில் நடத்தக்கூடாது என்று இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங் எதிர்ப்பு தெரிவித்தார்.

‘பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் தர்மசாலா மைதானம் அருகில் உள்ளது. இங்கு பாகிஸ்தான் அணியின் ஆட்டத்தை நடத்துவது ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் மனதை புண்படுத்தும் செயலாகும்’ என்று கருத்து தெரிவித்த அவர், இந்த போட்டிக்கு மாநில அரசால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து, இந்தியாவில் விளையாடும் தங்கள் அணிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தை பொருத்தமட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க தயார் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாகிஸ்தான் அணி கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பாகிஸ்தானை சேர்ந்த பாதுகாப்புத்துறை குழுவினர் இந்தியா வந்துள்ளனர். இந்தக் குழுவினர் தர்மசாலாவில் நடைபெறவுள்ள மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

கடந்த புதன்கிழமை பிற்பகல் லாகூரில் இருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு வரவிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினரின் பயணம் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

தங்கள் நாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் அளிக்கப்படவுள்ள பாதுகாப்பு தொடர்பாக திருப்திகரமான தகவல் கிடைக்காததால் வீரர்களின் இந்தியப் பயணம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண பாகிஸ்தானில் இருந்து செல்லும் ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து சரியான திட்டம் தெரிவிக்கப்படவில்லை. எனவே, இந்தியாவுக்கு செல்வதாக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷாஹர்யார் கான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி இன்று காலை இந்தியாவுக்கு புறப்பட்டது. 15 வீரர்கள், 12 அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் 27 பேரை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியினர் பலத்த பாதுகாப்புடன் கராச்சி விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அபுதாபி செல்லும் விமானத்தில் ஏறிய அவர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். கராச்சியில் இருந்து நேராக அபுதாபிக்கு சென்று அங்கு ஓய்வெடுத்த பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் இந்த அணியினர் இன்று மாலை கொல்கத்தா வந்தடைகின்றனர்.

முன்னதாக, கராச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ், ‘இந்தியாவில் எங்களுக்கு சிறப்பான விருந்தோம்பல் அளிக்கப்படும் என்பதை இதற்கு முன்னர் நாங்கள் அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கிறோம். மார்ச் 19-ம் தேதி இந்தியாவுடனான போட்டியில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒவ்வொரு அணியையும் கடந்து முன்னேறுவதில் எங்களது கவனம் இருக்கும்.

முதலில் வங்காளதேசத்துடன் மோதி அவர்களை கடந்து செல்ல வேண்டும். சொந்த மண்ணில் வீழ்த்த முடியாதபடி, அவர்கள் தற்போது விளையாட்டில் மிக நல்லநிலையில் இருக்கிறார்கள்’ என்று கூறினார்.

இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அனுபவம்வாய்ந்த முன்னாள் டெஸ்ட் கேப்டனான இந்திகாப் ஆலம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ரயன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →