Kaveri hospital releases DMK Chief Karunanidhi’s photo.

சிகிச்சைப் பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதி கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின் 7 ஆம் தேதியன்று வீடு திரும்பினார். இந்நிலையில் கருணாநிதிக்கு மீண்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]
Read More →Human chain protest on November 24th to protest against Central Govt: Karunanidhi

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மத்திய பா.ஜ.க. அரசு, “அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி” என்பதைப் போல எந்த விதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, திடீரென்று 8-ந்தேதி அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்பதுயரங்களுக்கு அளவே இல்லை. ஏழையெளிய மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், வேலைகளுக்கும் செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள ஒரு சில […]
Read More →Currency withdrawal affects common people –Says Karunanidhi.

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருப்பது பணக்காரர்களை விட ஏழைகளுக்குத்தான் பாதிப்பு அதிகம் – கருணாநிதி. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டு, இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது; கறுப்புப் பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்குக் காரணமாக உள்ளது என்றும் காரணம் கூறியிருக்கிறார். வரவேற்கத்தக்க அறிவிப்பு இது என்ற போதிலும், […]
Read More →Karunanidhi condemns Rahul arrest & ban on NDTV.

ராகுல் காந்தி கைது, என்டிடிவி மீதான தடைகளுக்கு கருணாநிதி கண்டனம். தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான் கோட் இந்திய விமானப்படை தளத்திற்குள் பயங்கரவாதிகள் திடீரென்று புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அந்த நிகழ்வினை என்.டி. டி.வி. இந்தியா இந்தி சேனல் அதனை ஒளிபரப்பியதாக மத்திய பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியதோடு, பத்து மாதங்கள் கழித்து, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல், மறுநாள் பிற்பகல் 1 […]
Read More →Karunanidhi praises L.Ganesan & Canada Parliament… criticize TN Govt for neglecting Anna Library.

இல.கணேசன் எம்பியானதற்கு வரவேற்பு, அண்ணா நூலகம் பராமரிக்காமல் போனதற்கு எதிர்ப்பு, கனடா நாடாளுமன்றத்துக்குப் பாராட்டு…….. கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை. திமுக தலைவர் கலைஞரின் கேள்வி – பதில்கள் வடிவிலான அறிக்கை: கேள்வி :- தமிழகத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி? கலைஞர் :- பா.ஜ.கட்சிக்காக உண்மையில் நீண்ட காலமாக உழைத்து வந்த அருமை நண்பர் இல. கணேசன் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். என்னிடம் தனிப்பட்ட முறையில் என்றும் […]
Read More →Karunanidhi asks whether Jayalalitha signed in the recommendation given to the Governor?

கவர்னருக்குக் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தில் ஜெயலலிதா கையொப்பம் இட்டிருக்கிறாரா?- கருணாநிதி கேள்வி. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 11.10.2016 அன்று என்னுடைய “உடன்பிறப்பு” மடலில், “முதல் அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையிலே இருக்கின்ற காரணத்தால், சரியான வழி காட்டுதலின்றி தமிழக அரசே செயல்பாடற்ற நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது என்பது தான் அனைவரின் கருத்து. அ.தி.மு.க. அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டமோ, அமைச்சரவைக் கூட்டமோ, சட்டமன்றச் சிறப்புக் கூட்டமோ எதுவும் நடத்தப்படவில்லை” என்றும்; “தமிழகத்திலே உள்ள […]
Read More →Karunanidhi welcomes Chennai High Court ruling on civic polls

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு கருணாநிதி வரவேற்பு இது தொடர்பாக, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான சுழற்சிமுறை இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அந்த வழக்கில் கடந்த மாதம் 28-ம் தேதியன்று விசாரணை நடைபெற்றபோதே, “தேர்தல் தேதியை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துவிட்டு, மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என அறிவித்ததால், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ஆய்வு […]
Read More →Put to an end for the rumors circulating over the health of the Chief Minister- Karunanidhi asks.

தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் – கருணாநிதி கோரிக்கை. தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு வார காலத்திற்கும் மேலாக கடந்த 22-ம் தேதி முதல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலே இருக்க வேண்டுமென்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அதே நேரத்தில் […]
Read More →There is no security in prisons in ADMK’s Govt: Karunanidhi accusation

அதிமுக ஆட்சியில் சிறைகளில் கூட பாதுகாப்பு இல்லை: கருணாநிதி குற்றச்சாட்டு அதிமுக ஆட்சியில் சிறைச்சாலைகள் கூட பாதுகாப்பற்ற இடங்களாக மாறிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி பிரச்சினை கடுமையாக இருக்கும்போது அதுபற்றி எதுவும் கூறாமல், மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர்கள் மத்தியில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றியுள்ளார். காவிரிப் பிரச்சினையில் கடும் வேதனைக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகளை அவர் மக்களாகவே கருதவில்லை போலும். காவிரிப் பிரச்சினையில் முதல்வர் […]
Read More →No one can destroy DMK – Says Karunanidhi.

தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று சென்னையில் நடந்த விழாவில் கருணாநிதி பேசினார். சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள், பேரறிஞர் அண்ணாவின் 108-வது பிறந்தநாள், தி.மு.க.வின் 68-வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. அறக்கட்டளை சார்பில் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அதிக […]
Read More →