Result shows people kept TTV Diakaran in the place of Jayalalitha – says Thirumavalavan.

மக்கள் தினகரனை ஜெயலலிதாவின் இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் என்பதைத்தான் தேர்தல் முடிவு காட்டுகிறது – தொல். திருமாவளவன். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டுமொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார். ஆரம்பத்தில் தினகரன் முன்னிலைப் பெற்றதும் தேர்தல் எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் […]
Read More →Thirumavalavan’s party to support DMK.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு – திருமாவளவன் அறிவிப்பு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. […]
Read More →It is wrong to open up TN jobs to other states: Thirumavalavan

தமிழக அரசுப் பணிகளை பிற மாநிலத்தவருக்கு திறந்து விடுவது தீங்கானது: திருமாவளவன் தமிழக அரசுப் பணிகளையும் பிற மாநிலத்தவருக்கு திறந்து விடுவது தமிழக மக்களுக்கு செய்யும் தீங்காகவே கருதப்படும். எனவே தமிழக அரசு இந்த முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பிற மாநிலத்தவர் பங்கேற்பது […]
Read More →If the Nation goes to Modi again, we cannot save the nation: Thirumavalavan

மீண்டும் மோடி கைகளில் சிக்கினால் தேசத்தை காப்பாற்ற முடியாது: திருமாவளவன் ஆவேச பேச்சு கோவையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து இந்த பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. மதவாத சக்திகளிடம் இருந்து தேசத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான சூழலில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. தனியார் கட்டுப்பாட்டில் இருந்த வங்கிகளை இந்திரா காந்தி பலத்த […]
Read More →Edappadi Palaniswamy feels that he will lose power by opposing the Governor? – Asks Thirumavalavan.

ஆளுநரை எதிர்த்தால் அதிகாரம் பறிபோய்விடும் என்று முதல்வர் பழனிசாமி அச்சப்படுகிறாரா?- திருமாவளவன் ஆளுநரை எதிர்த்தால் தமது அதிகாரம் பறிபோய்விடும் என்று தமிழக முதல்வர் அச்சப்படுகிறாரா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக ஆளுநர் நேற்று கோவையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதிகார வரம்பை மீறிய அவரது இந்த […]
Read More →Caste-communal forces trying to put foot in Tamil Nadu: Thirumavalavan

தமிழகத்தில் சாதிய-மதவாத சக்திகள் காலூன்ற பார்க்கின்றன: திருமாவளவன் பேட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்ததே தமிழக அரசு தான். ஆனால் தற்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளது என்ன வென்று தெரியவில்லை. இது தொடர்பாக […]
Read More →Rajendra Balagalli admitted the truth: says Thirumavalavan

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உண்மையை ஒப்புக்கொண்டார்: திருமாவளவன் பேட்டி சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பா.ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனம் திறந்து உண்மையை பேசி இருக்கிறார். இது அவரது ஒப்புதல் வாக்குமூலம். பா.ஜனதா, தமிழக அரசின் நடவடிக்கையில் தலையிடுகிறது என்று ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலில் சுட்டிக்காட்டியது […]
Read More →Demonstration in Ag.11, against the central and state governments who did not control the dengue

டெங்குவைக் கட்டுப்படுத்தாத மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து அக்.11-ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அக்டோபர் 11-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் பத்து பேர் என டெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த இரண்டு […]
Read More →Thirumavalavan condemns the act of removing Taj Mahal from Tourism list.

உ.பி. சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம்: தொல்.திருமாவளவன் கண்டனம் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ளது தாஜ்மகால். ஷாஜகான் தனது மனைவியின் நினைவாக கட்டப்பட்டது இந்த நினைவு சின்னம். உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. சமீபத்தில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் சுற்றுலா துறை மந்திரியான பகுகுணா ஜோஷி, உ.பி.யில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களுக்கான வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். அந்த கையேட்டில் தாஜ்மகாலின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]
Read More →Only because of false promises Anitha commits suicide – says Thirumavalavan.

மாணவி அனிதா மரணத்தை கொச்சைப்படுத்துவதா? திருமாவளவன் கண்டனம் அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் விமர்சித்து வருகின்றனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மன சாட்சியோடு நீட் பிரச்சினையை அணுக வேண்டும். அனிதா தாயை இழந்து 10 ஆண்டுகள் ஆகிறது. தந்தை மூட்டை தூக்கும் தொழிலாளி. இந்த பின்னணியில் அனிதா 1200-க்கு 1176 மதிப் பெண் பெற்று இருக்கிறார். ஆனால் நீட் தேர்வில் 86 மதிப்பெண்களை பெற்று இருந்தார். […]
Read More →