Rahul Gandhi consults TN Cong Leaders about the situation. Leaders had different opinions

தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து காங் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை; திருநாவுக்கரசர் – இளங்கோவன் இடையே கருத்து மோதல். தமிழக அரசியல் நிலவரம் பற்றி ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க சசிகலா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவு அளித்து வந்த கட்சி எம்.எல்.ஏ.க்களில் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய நேரத்தில் நெருக்கடி ஏற்படலாம் என்று சசிகலா கருதுவதாக கூறப்படுகிறது. […]
Read More →Delay in appointing TN Cong president: High Command in confusion.

தமிழக காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் தொடர்ந்து குழப்பம்; டெல்லி மேலிடம் தடுமாறுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்து 3 மாதம் ஆகப்போகிறது. புதிய தலைவராக யாரை நியமிப்பது என்று கட்சி மேலிடம் அவசர அவசரமாக ஆலோசனையில் ஈடுபட்டது. பதவியை கைப்பற்ற களம் இறங்கிய ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், செல்லக்குமார், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன், குஷ்பு உள்ளிட்ட சுமார் 20 பேரை சோனியாவும், ராகுலும் சந்தித்து பேசினார்கள். அத்தனை […]
Read More →In 70 years history this is the first time Congress survives without leader in Tamil Nadu.

70 வருட காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் இல்லாமல் கட்சி இருப்பது இதுதான் முதல் தடவை. தொண்டர்கள் குமுறல். தமிழக காங்கிரஸ் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக கட்சி செயல்பாடு முடங்கி சத்யமூர்த்தி பவனும் வெறிச்சோடி கிடக்கிறது. தலைவராக யார் இருந்தாலும் சரி சத்யமூர்த்தி பவன் படிப்படியாக இயங்கும். தலைவரின் ஆதரவாளர்கள், தலைவரை பார்க்க வருபவர்கள் என்று வந்து குவியும் தொண்டர்களால் சத்யமூர்த்தி பவன் எப்போதும் கலகலப்பாகவே காணப்படும். தற்போது களை இழந்து கிடக்கிறது. கடந்த மாதம் […]
Read More →Who is the new leader of Tamil Nadu Congress? Tirunavukkarasar met Sonia Gandhi

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்?: திருநாவுக்கரசர் பேட்டி காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை மிக விரைவில் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அறிவிப்பார்கள்?. என்னையோ அல்லது வேறு யாரையோ தலைவராக அறிவித்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கட்சியை வளர்க்க இணைந்து செயல்படுவோம். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்னை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கக்கூடாது […]
Read More →Who will lead Congress in TN? Karate Thiagarajan meets Sonia Gandhi

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்?: சோனியாகாந்தியுடன் கராத்தே தியாகராஜன் சந்திப்பு தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்தித்தது. தி.மு.க.விடம் இருந்து பிடிவாதமாக 41 தொகுதிகளை வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டும் வெற்றியை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு மாநில தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் காரணம் என்று முன்னாள் தலைவர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு புகார் மனு அனுப்பினர். தங்களது தொகுதிக்கு இளங்கோவன் […]
Read More →