Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Tamil manila congress condemned Gnanasekaran.

By   /  July 27, 2016  /  Comments Off on Tamil manila congress condemned Gnanasekaran.

    Print       Email

அதிமுகவில் சேர்ந்து ஜிகேவாசனை விமர்சித்து வரும் ஞானசேகரனுக்கு த.மா.கா. கடும் கண்டனம்.201607271400434506_tamil-maanila-congress-condemned-gnanasekaran_SECVPF

த.மா.கா.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு த.மா.கா சார்பில் துணை தலைவர் விடியல் சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

InCorpTaxAct
Suvidha

த.மா.கா.விலும், காங்கிரசிலும் 4 முறை எம்.எல்.ஏ பதவி சுகத்தை அனுபவித்தவர் ஞானசேகரன் 20 ஆண்டுகளாக பதவிசுகத்தை மட்டுமே அனுபவித்து பதவி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர்.

பெருந்தலைவர் காமராஜர், மூப்பனார் கொள்கைகளுக்கு துரோகம் செய்துவிட்டு பதவிக்காக அலைந்து மாற்று கட்சியில் ஐக்கியமாகி உள்ள ஞானசேகரனுக்கு பதவியை பற்றி எண்ணாமல் தொண்டர்களை பற்றி நினைக்கும் வாசன் பற்றி விமர்சிக்க அருகதை இல்லை.

20 ஆண்டுகளாக தான் மட்டுமே வளர்ந்து மாவட்டத்தில் யாரையும் வளரவிடாமல் பதவி வெறி காரணமாக அலைந்த ஞானசேகரன் த.மா.காவை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.

இன்னொரு கட்சியில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த – தனக்கு பதவி சுகம் தந்த இயக்கத்தை விமர்சிப்பது தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது. பெற்று வளர்த்த தாயை விமர்சிப்பதற்கு சமமானது. இனி மேலும் விமர்சனத்தை தொடர்ந்தால் த.மா.கா தொண்டர்கள் தக்க பதிலடி தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →