Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Prabhu Deva to romance Hansika in ‘Gulebakavali’

By   /  April 30, 2017  /  Comments Off on Prabhu Deva to romance Hansika in ‘Gulebakavali’

    Print       Email

prabhu290417_1பிரபுதேவா – ஹன்சிகா இணையும் ‘குலேபாகவாலி’

 

InCorpTaxAct
Suvidha

 

புதுமுக இயக்குநர் கர்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குலேபாகவாலி’ படத்தில் பிரபுதேவா – ஹன்சிகா இணைந்து நடித்து வருகிறார்கள்.

‘தேவி’ படத்தைத் தொடர்ந்து ‘யங் மங் சங்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் பிரபுதேவா. லட்சுமி மேனன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை எம்.எஸ்.அர்ஜுன் இயக்கி வருகிறார். வாசன் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘யங் மங் சங்’ படத்தைத் தொடர்ந்து பல்வேறு கதைகளைக் கேட்டு வந்தார் பிரபுதேவா. மேலும், விஷால் – கார்த்தி நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தை இயக்கும் பணிகளையும் கவனித்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில், புதுமுக இயக்குநர் கர்ணன் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே தேதிகள் ஒதுக்கினார் பிரபுதேவா. ‘குலேபாகவாலி(Gulebakavali)’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ‘குலேபாகவாலி’ படத்தைத் தொடர்ந்து, ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தை இயக்கவுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய ‘எங்கேயும் காதல்’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஹன்சிகா. தற்போது பிரபுதேவா நாயகியாக ‘குலேபாகவாலி’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →