தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லை
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர் இன்று காலை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று பட்ஜெட்டை வைத்து வணங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றார்.
பின்னர் சட்டப்பேரவைக்கு சென்ற ஜெயக்குமார், பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்வதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரினார். சபாநாயகர் அனுமதி அளித்ததையடுத்து பேரவையில் காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார், 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட்டில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் பல்வேறு மக்கள் நல பிரச்சினைகளை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவருவதற்கு தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும். அதற்காக, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது:-
• மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000மாக உயர்த்தப்படும். இதற்கென 11.97 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
• பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் மாதாந்திரப் பயணப்படியானது செவித்திறன் குறைபாடுடைய அரசுப் பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
• 2017-2018ஆம் ஆண்டில் 3.16 கோடி ரூபாய் செலவில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள 10,000 நபர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும்.
• தசைச்சிதைவு மற்றும் பக்கவாதத்தால் கை, கால் பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு 6.50 கோடி ரூபாய் செலவில் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் முதன் முறையாக வழங்கப்படும்.
- 2017-2018 ஆம் ஆண்டில், அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 10,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.• சென்னை மற்றும் சிவகங்கையில் 3.31 கோடி ரூபாய் செலவில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டைக் கண்டறியும் ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்.
- மாணவ, மாணவியருக்கு நான்கு சீருடைத்தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி கருவிகளையும், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகள் போன்றவற்றையும் இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கும்.• 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக, 1,503 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் மடிக் கணினிகள் வழங்குவதற்காக 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலிலதா இருந்தபோதே இலவச திட்டங்களால் அரசு கடும் நிதிச்சுமையில் இருந்தது. அவர் வழியில் அவர் விட்டுச் சென்ற இலவச திட்டப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல எடப்பாடி பழனிச்சாமி அரசும் தீவிரமாக உள்ளதால் பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய நிலை இருந்தது.
எனவே, ஜெயலலிதா இருந்தபோது தாக்கல் செய்த பட்ஜெட்டைப் போன்று, இந்த ஆண்டும் வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? அல்லது புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த பரபரபான சூழ்நிலையில் இன்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு கணிசமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.