தமிழ்நாடு மந்திரிசபை விரிவாக்கம்; 4 புதிய மந்திரிகள் நியமனம்.
தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில், பதவியேற்ற முதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு நிலோபர் கபில், பாஸ்கரன், சேவூர் ராமச்சந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பதவியேற்ற அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த துறைகளைப் பிரித்து புதிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நிலோபர் கஃபில் தொழிலாளர் நலத்துறையை கவனிப்பார். பாஸ்கரன் காதி கிராமத் தொழில் துறை அமைச்சராகவும், செவ்வூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், பாலகிருஷ்ணா ரெட்டி கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் செயல்படுவார்கள். இதன்மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
புதிய அமைச்சர்கள் 4 பேரும் நாளை மறுநாள் மாலை 7 மணிக்கு பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.