Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

Tamil Nadu Chief Minister Edappadi meets Shashikala today

By   /  February 17, 2017  /  Comments Off on Tamil Nadu Chief Minister Edappadi meets Shashikala today

    Print       Email

complaint-registered-against-sasikala-and-edappadi-palanisamyசசிகலாவை இன்று சந்திக்கிறார் தமிழக முதல்வர்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் கடந்த புதன்கிழமை சசிகலா அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை தமிழக புதிய முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சரவை சகாக்களுடன் உடனடியாக பெங்களூரு சென்று சசிகலாவை சந்திக்க திட்டமிட்டார்.

InCorpTaxAct
Suvidha

கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி மாலை 6 மணிக்கு மேல் கைதிகளை சந்திக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் பெங்களூருவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

இதன்படி இன்று காலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நேரில் சந்தித்து ஆசிபெற திட்டமிட்டுள்ளார். தமிழக முதல்வரின் வருகை தொடர்பாக சசிகலாவின் வழக்கறிஞர்கள் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அளித்துள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு வந்து சசிகலாவை சந்தித்து ஆசி பெறுவார் என கர்நாடக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →