பெங்களூர் சிறையிலிருக்கும் சசிகலாவைத் தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர்.
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 14-ம் தேதி அன்று தீர்ப்பளித்தது. 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவை செங்கோட்டையன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் ராஜூ ஆகிய 4 பேர் இருந்தனர்.
இன்று காலை அமைச்சர்கள் 4 பேரும் விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றனர். முன்னதாக சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க ஏற்கனவே சென்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செல்லூர் ராஜூ உள்ளிட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர் செல்வம் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி இந்த பொதுநலன் வழக்கினை தொடர்ந்து இருந்தார்.
கே.சி.பழனிசாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, உள்கட்சி விவகாரத்தினை ஏன் நீதிமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் பழனிச்சாமியிடம் கூறினர். நீதிபதிகள் அறிவுறுத்தலின் பேரில் தனது மனுவை அவர் வாபஸ் பெற்றார். இந்த நிலையில் சசிகலா நியமனத்திற்கு எதிரான வழக்கு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சசிகலா நியமனத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.