Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Tamilaga Vaalvurimai Katchi quits AIADMK alliance.

By   /  April 10, 2016  /  Comments Off on Tamilaga Vaalvurimai Katchi quits AIADMK alliance.

    Print       Email

07-1438927507-velmurugan34-6989தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகல்

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த தமிழக  வாழ்வுரிமை கட்சி அந்த கூட்டணியில் இருந்து இன்று விலகியுள்ளது.

InCorpTaxAct
Suvidha

அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொடர்பான பட்டியலை சமீபத்தில் வெளியிட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நேற்று சென்னையில் தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அந்த கூட்டணியில் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி இன்று விலகியது.

இந்த விலகல் முடிவு தொடர்பாக, சென்னையில் இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகி விட்டதாகவும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக வரும் 12-ம் தேதி நெய்வேலியில் நடைபெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →