Loading...
You are here:  Home  >  Community News  >  Current Article

Tears in St,Mary’s statue at Kanniakumari. People throng the church.

By   /  April 21, 2017  /  Comments Off on Tears in St,Mary’s statue at Kanniakumari. People throng the church.

    Print       Email

201704211738419968_kanyakumari-matha-statue-eye-Tears-public-and-woman-worship_SECVPFகன்னியாகுமரியில் மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து வடிந்த கண்ணீர்: பொதுமக்கள், பெண்கள் திரண்டனர்

கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன்புரம் சமாதான ராக்கினி மாதா கெபி உள்ளது. 1959-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கெபியில் ஒரே மரத்தினால் ஆன மாதா சொரூபம் நிறுவப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று ஆலயத்தில் இருந்து மகிழ்ச்சி மாதா சிலை பவனியாக எடுத்து வரப்பட்டு இந்த கெபியில் வைக்கப்பட்டு திருப்பலி மற்றும் நற்கருணை ஆசிர் நடைபெறும். இது தவிர காலை, மாலை மற்றும் இரவு நேரத்தில் இப்பகுதி மக்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம்.

InCorpTaxAct
Suvidha

இதுபோல நேற்று மாலையிலும் இப்பகுதி மக்கள் கெபியில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மாதா சிலையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிலர் அந்த சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதை கண்டனர்.

அந்த கண்ணீர் கண்களில் இருந்து வடிந்து மாதாவின் தாடைப் பகுதியில் தேங்கியது. இதை கண்டு மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த தகவல் கன்னியாகுமரி முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது.

201704211738419968_matha-21._L_styvpfதகவல் அறிந்து அங்கு திரண்ட மக்கள் மாதாவின் சிலையில் இருந்து வடிந்த கண்ணீரை துடைத்தனர். அதன்பிறகும் தொடர்ந்து கண்ணீர் வடிந்தபடி இருந்தது. விடிய, விடிய கண்ணீர் வடிந்ததால், கன்னியாகுமரி மட்டுமின்றி அருகில் உள்ள கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கிய புரம், மணக்குடி, கீழமணக்குடி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்களிலும் கன்னியாகுமரிக்கு வந்தனர். அவர்கள் விடிய, விடிய கெபி முன்பு அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஆலய நிர்வாகிகள், பங்குத்தந்தை ஆகியோரும் கெபியில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இன்று காலையிலும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →