Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

Thanjavur & Aravakkurichi By Elections postponed for 3 weeks.

By   /  May 20, 2016  /  Comments Off on Thanjavur & Aravakkurichi By Elections postponed for 3 weeks.

    Print       Email

201604231347427292_TN-collectors-superintendent-changed-election-commission_SECVPFதஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல்கள் 3 வாரங்களுக்குத் தள்ளிவைப்பு.

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பணம் பறிமுதல் மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் காரணமாக தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், மற்ற 232 தொகுதிகளுக்கு மட்டும் 16-ம் தேதி தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

InCorpTaxAct
Suvidha

இந்நிலையில், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி 2 வேட்பாளர்கள் உள்பட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை 3 வாரங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்திருப்பதாகவும், வேட்பாளர்களின் ஆலோசனையைக் கேட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர்களின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகளை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள 23-ம் தேதி, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →