Loading...
You are here:  Home  >  Sports  >  Cricket  >  Current Article

Thank you Virat – Sachin  replies  through  Twitter.

By   /  March 20, 2016  /  Comments Off on Thank you Virat – Sachin  replies  through  Twitter.

    Print       Email

kohli_getty1109விராட் கோலிக்கு சச்சின் நன்றி.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான்- இந்திய அணிகள் மோதின.

InCorpTaxAct
Suvidha

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்தியா 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வீராட்கோலி 37 பந்தில் 55 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். போட்டியை சச்சின், அமிதாப் பச்சன், இம்ரான் கான் உட்பட பிரபலங்கள் நேரில் கண்டு ரசித்தார்கள்.

அரை சதம் அடித்துவிட்டு ஆடுகளத்தில் இருந்தபடியே சச்சின் இருந்த கேலரியை நோக்கி தலைவணங்கி அவருக்கு மரியாதை செய்தார் வீராட் கோலி.
ஆட்ட நாயகன் விருது பெற்ற வீராட்கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சவாலாக இருந்தது. கிரிக்கெட் வீரர் என்ற முறையில் புதிய சவாலை விரும்புகிறேன். கடந்த போட்டியில் எனது ஆட்டம் எடுபடவில்லை. அது உண்மையில் காயத்தை ஏற்படுத்தியது. யுவராஜ்சிங் என்னுடன் இணைந்து சிறந்த ஜோடி அமைத்து கொடுத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிராக நான் எடுத்த இந்த அரை சத்ததை தெண்டுல்கருக்கு அர்ப்பணிக்கிறேன். அவரது ஆட்டத்தை பார்த்துதான் நான் விளையாட தொடங்கினேன். எனது ஆட்டத்தை அவர் 67 ஆயிரம் ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்தார். இதை நான் உணர்ச்சி பெருக்காக நினைக்கிறேன்.” என்று சொல்லியிருந்தார் விராட் கோலி.

இந்த போட்டி குறித்து சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் “ மிகப் பெரிய வெற்றி இந்தியா. சிறப்பான இன்னிங்ஸ்க்கும், மரியாதைக்கும் (தலைவணங்கியதற்காகவும்) நன்றி வீராட் கோலி” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு டுவிட்டில் “ போட்டி முடிந்து இந்திய அணி ஓய்வு அறைக்கு திரும்பும் போது என்னை பார்த்து கை அசைத்தப்படி சென்றனர். அது நான் இன்னும் (ஓய்வுக்கு பிறகும்) அணியில் இருப்பதாக உணர்ந்தேன்.”

-ரயன்.

 

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →