Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

The complete DMDK party came under the control of Premalatha – charges Chandrakumar.

By   /  April 6, 2016  /  Comments Off on The complete DMDK party came under the control of Premalatha – charges Chandrakumar.

    Print       Email

201604061446109579_DMDK-came-under-premalatha-control-completely-Chandrakumar_SECVPFதேமுதிக கட்சியே பிரேமலதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது- குற்றம் சாட்டுகிறார் சந்திரகுமார்.

தே.மு.தி.க., தலைமை கூட்டணி குறித்த முடிவை தன்னிச்சையாக அறிவித்ததாகவும், தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் சந்திரகுமார் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ-க்களும், நிர்வாகிகள் சிலரும் நேற்று அதிரடியாக பேட்டியளித்தனர்.

InCorpTaxAct
Suvidha

இதனையடுத்து, உடனடியாக அதிருப்தி நிர்வாகிகள் அனைவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கி அதிரடியாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டார்

இந்நிலையில், தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் உள்ளிட்டோர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதன் விவரம்:-

தாங்கள் தெரிவித்த கருத்து குறித்து எங்களிடம் விளக்கம் கேட்கவில்லை, குறைந்த பட்சமாக நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது எங்களை கட்டுப்படுத்தாது, செல்லாது. ஒட்டு மொத்த தேமுதிக கருத்தையே நாங்கள் வெளிப்படுத்தினோம்.

எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்க முடியும். கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு உண்டு.

பொதுக்குழுவில் தலைமை நிர்வாகிகள் 9 பேரும், உயர்மட்ட குழு நிர்வாகிகள் 14 பேரும் சேர்ந்து தான் எந்த முடிவையும் எடுக்க முடியும். முடிவு எடுக்கிற அந்த குழுவில் நாங்கள் 5 பேர் இடம் பெற்று இருக்கிறோம். அப்படி இருக்கும்போது எங்களை எப்படி அவர் நீக்க முடியும்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம் உள்ள குழுவில் இருக்கும் எங்களை நீக்கும் அதிகாரம் விஜயகாந்திற்கு கிடையாது. அவர் தன்னிச்சையாக நீக்க முடியாது. பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும்.

அதுவும் பதவி பொறுப்பு களில் இருந்து மட்டும்தான் நீக்க முடியும். அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்து நீக்க முடியாது. எங்களுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களையும் வரவழைத்து பேச வைத்துள்ளனர். இதுபோன்று உங்களை சொல்லச் சொல்கிறார்கள்.

எங்களிடத்தில் என்ன தவறு இருக்கிறது. பணம் பெற்றுக் கொண்டு விலைபோய்விட்டதாக எங்கள் மீது அவதூறு பரபரப்பப்படுகிறது. பணத்திற்கு விலை போகவில்லை.

”தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி உருவாகக் காரணம் பிரேமலதா தான். தலைவர் விஜயகாந்துக்குப் பிடிக்காத, நிர்வாகிகளுக்குப் பிடிக்காத, தொண்டர்களுக்குப் பிடிக்காத தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது பிரேமலதாதான். அவர் தான் கூட்டணிக்காக வைகோவிடம் பேசினார். இதை பகிரங்க குற்றச்சாட்டாகவே சொல்கிறேன்.

வேட்பாளர் நேர்காணலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லலாமா? என்று விஜயகாந்த் கேட்டார். திமுகவின் முக்கிய பிரமுகரை இல்லத்துக்கு அழைத்து வந்து ‘உங்களுடன் வரத் தயார். 20 நாட்கள் பொறுத்திருங்கள்’ என்று விஜயகாந்த் சொன்னார்.

அந்த அடிப்படையில்தான் திமுக தலைவர் கருணாநிதி ‘பழம் கனிந்து கொண்டிருக்கிறது. வெகுவிரைவில் பாலில் விழும்’ என்று சொன்னார். இதையெல்லாம் ஏன் விஜயகாந்த் செய்தா? சொன்னார்? என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே பயணத்தில் ‘தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் ஏற்பட்டிருந்தால் அந்த தவறை திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றார்.

பாஜகவுடனும் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. தேமுதிக விடுத்த சில கோரிக்கைகளை பாஜக ஏற்கவில்லை. ஆனால், அதே கோரிக்கைகளை மக்கள் நலக் கூட்டணி ஏற்றுக்கொண்டது. இதனாலேயே தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி உருவானது. இந்த கூட்டணி உருவாக பிரேமலதா தான் முக்கியக் காரணம்” என்றார் சந்திரகுமார்.

இந்த பேட்டியின் போது பார்த்திபன் எம்.எல்.ஏ உள்ளிட்ட கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →