Loading...
You are here:  Home  >  Politics  >  Andhra Politics  >  Current Article

The PM who opened India’s door to liberalization P.V.Narasimha Rao’s 95th Birth day to day.

By   /  June 28, 2016  /  Comments Off on The PM who opened India’s door to liberalization P.V.Narasimha Rao’s 95th Birth day to day.

    Print       Email

c9ff17517461150e824780c85b1fd130தனியார்மய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி இந்தியாவின் முகத்தை மாற்றிய நரசிம்ம ராவின் 95வது பிறந்த தினம்.

முன்னாள் பிரதமரான பி.வி. நரசிம்ம ராவ் விவசாய பிராமண குடும்பத்தில், கங்கா ராவ் மற்றும் ருக்மிணிஅம்மா தம்பதியருக்கு மகனாக ஜூன் 28, 1921ஆம் ஆண்டு பிறந்தார்.

InCorpTaxAct
Suvidha

ஆந்திர பிரதேசத்தில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி அவரது சொந்த கிராமம் ஆகும். பிவி.நரசிம்ம ராவின் 95-வது பிறந்த தினம் இன்று ஆகும்.

பி.வி.நரசிம்ம ராவ் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவர், தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.

1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.

இந்தியாவில் நேரு காலத்தில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கலப்பு பொருளாதார கொள்கை கடைபிடிக்கப்பட்டு வந்தது. நரசிம்ம ராவ் தான் புதிய தனியார்மய பொருளாதார கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்.

நரசிம்ம ராவின் பிறந்த தினத்திற்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் வாழ்த்து செய்தியில் மோடி கூறியுள்ளதாவது:-

பி.வி.நரசிம்ம ராவிற்கு பிறந்த தின வாழ்த்துக்கள். இக்கட்டான நிலையில் இந்தியாவை வழிநடத்தி சென்றவர் நரசிம்ம ராவ். அவரது தலைமை மிகவும் குறிப்பிடத்தக்கது, இன்றியமையாதது.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

GATeS 15 th Anniversary and Telangana Formation Day Celebrations

Read More →