Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

THEEMITHI (walking  on  fire) festival  will  be  banned  in  Karnataka  says  Siddaramaiah.

By   /  March 23, 2016  /  Comments Off on THEEMITHI (walking  on  fire) festival  will  be  banned  in  Karnataka  says  Siddaramaiah.

    Print       Email

4.5தீ மிதித் திருவிழா கர்நாடகத்தில் தடை செய்யப்படும் – சித்தராமய்யா அறிவிப்பு.

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்கவுடா எழுந்து, துமகூருவில் தீமிதி திருவிழாவில் ஒரே நேரத்தில் ஓடியபோது 100 பேர் தீயில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதில் அளித்த முதல்-மந்திரி சித்தராமையா, “மூடநம்பிக்கைகளை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டியது அவசியம். இந்த தீமிதி திருவிழாவில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் நிவாரணம் வழங்கி இத்தகைய நிகழ்வுகளை ஊக்குவிக்க முடியாது. கர்நாடகத்தில் தீமிதி திருவிழா நடத்த தடை விதிக்கப்படும்“ என்றார்.

InCorpTaxAct
Suvidha

முன்னதாக இந்த பிரச்சினையை கிளப்பி பேசிய பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்கவுடா, “அரசு சரியான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் துமகூருவில் தீமிதி திருவிழாவில் 100 பேர் தீயில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேர் மரணம் அடைந்துவிட்டனர். இன்னும் சிலர் அபாய கட்டத்தில் உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்“ என்றார்.

இதற்கு பதில் அளித்த துமகூரு மாவட்ட பொறுப்பு மந்திரி ஜெயச்சந்திரா, “தீயில் விழுந்து மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு மேல் நிவாரணத்தை அதிகரித்து வழங்க முடியாது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது மூடநம்பிக்கையின் வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது“ என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், “தீயில் காயம் அடைந்தவர்கள் ஏழை மக்கள். மரணம் அடைந்தவர்களின் walk.14102014_92809_amகுடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களை நான் நேரில் சென்று பார்த்தேன். அவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மீது கருணை காட்ட வேண்டும்“ என்றார்.

அப்போது ஜனதா தளம்(எஸ்) கட்சி உறுப்பினர் எச்.கே.குமாரசாமி எழுந்து, மூடநம்பிக்கை தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்றும், அதற்கு எங்கள் கட்சி முழு ஆதரவு வழங்கும் என்றும் கூறினார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →