2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெறும் எண்ணமில்லை: நிதி மந்திரி அருண் ஜெட்லி
கடந்தாண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்த பின்னர் பழைய ரூபாய் நோட்டுக்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டு அதிகமாக புழக்கத்தில் இருப்பதால், அது திரும்பப் பெறப்படலாம் அல்லது அச்சடிப்பது நிறுத்தப்படலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் ஸ்டேட் வங்கி ஆய்வறிக்கையில் கூறப்பட்டது.
இதனையடுத்து, 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இந்நிலையில், மேற்கண்ட தகவல்கள் வதந்தி எனவும், 2000 ரூபாயை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.