Loading...
You are here:  Home  >  Daily News  >  Current Article

There is political maneuver to spoil Jayalalitha’s name- says Dinakaran.

By   /  December 6, 2017  /  Comments Off on There is political maneuver to spoil Jayalalitha’s name- says Dinakaran.

    Print       Email

ஜெயலலிதாவின் தூய வாழ்க்கையை கொச்சைப்படுத்துவது அரசியல் சூழ்ச்சி: சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என டிடிவி தினகரன் எச்சரிக்கை

 

EIS
EnGeniusInc

 

ஜெயலலிதாவின் தூய வாழ்வை கொச்சைப்படுத்த முயற்சிப்பதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவுறும் நிலையில் அம்ருதாவின் வழக்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘என் வாழ்வு தமிழக மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தவவாழ்வு’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை தெரிவித்துள்ளார். திரைத்துறையில் சிகரத்தில் நின்ற காலம் தொட்டு ‘அம்மா’ என்ற சொல்லால் சிகரமாகவே உயர்ந்த காலம் வரை அவரின் வாழ்வு ஒரு திறந்த புத்தகம்தான்.

அவர் மறைந்து ஓராண்டாகியுள்ள இந்நேரத்தில், அவரது பெரும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பல நாட்களாக திட்டமிட்டு, இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகளை ஒரு சிலர் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இது, தமிழக மக்களுக்கும் ஜெயலலிதாவை இதயத்தில் வைத்து பூஜிக்கும் தொண்டர்களுக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைந்த பின் அவர் நிர்மானித்த மக்கள் நல கொள்கைகளை, கட்சியை நிர்மூலமாக்க வடதிசையினர் இங்குள்ள துரோகிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சீரழித்தனர். அதை மீண்டும் கட்டி எழுப்ப நாம் போராடிக் கொண்டிருக்கும்போது மனிதநேயமற்ற வகையிலும், காழ்ப்புணர்ச்சியுடனும் சதித்திட்டம் தீட்டி, ஜெயலலிதா வாழ்ந்த தூய வாழ்வையே கொச்சைப்படுத்த சிலர் முனைகின்றனர். இதில் மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் கண்டனத்துக்குரியது.

ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இதுபோன்ற அவதூறுகளை பரப்பிக் கொண்டிருப்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். ஜெயலலிதா காட்டிய பாதையில் பயணிக்கும் நாம், இறுதி மூச்சுவரை அவர் புகழை போற்றி பாதுகாப்போம்.

இவ்வாறு அறிக்கையில் தினகரன் கூறியுள்ளார்.

Charter Global
InfoSmart
Swapna
InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Chennai Police Inspector gunned by burglars in Rajasthan

Read More →