Loading...
You are here:  Home  >  Featured News  >  Current Article

These people exploited me, Saritha Nair revealed names in a sealed cover.

By   /  February 5, 2016  /  Comments Off on These people exploited me, Saritha Nair revealed names in a sealed cover.

    Print       Email

Ernakulam: Saritha S Nair, accused in solar panel duping case, being produced in a court in Ernakulam on Friday. PTI Photo(PTI11_22_2013_000066B) *** Local Caption ***

தன்னைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் பட்டியலை மூடிய கவரில் தந்தார் சரிதா நாயர்.

InCorpTaxAct
Suvidha

சரிதாநாயரின் முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் அளித்த சாட்சியத்தில் மோசடிக்கு துணை நிற்க அரசியல் பிரமுகர்கள் பலரும் சரிதாநாயரை இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

முதலில் இதனை மறுத்த சரிதாநாயர், அதன் பிறகு இந்த மோசடி தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் பலர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான அவர், நீதிபதி சிவராஜன் முன்பு பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:–

கேரளாவில் டீம் சோலார் நிறுவனத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பங்கு உண்டு. முதல்வர் உம்மன் சாண்டி பாலக்காட்டில் உள்ள அரசு தொழிற் பூங்காவில் பல ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்வதாகவும், இடுக்கி கைலாசபாறையிலும் இது போல இடம் ஒதுக்கி தருவதாகவும் உறுதி கூறினார்.

இது தொடர்பாக மின் வாரியத்துறை மந்திரி ஆரியாடன் முகம்மதுவை பலமுறை சந்தித்து பேசினேன். அப்போது அவர் பல நபர்களை டீம் சோலார் கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

எனது நிறுவனத்தை வளர்த்தெடுக்க பல்வேறு இன்னல்களை சந்தித்தேன். முதல்–மந்திரி உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடி பணம் கொடுத்தேன்.

பல அரசியல் பிரமுகர்கள் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தனர். அதற்காக அவர்களின் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினர். அவர்களின் பேச்சை நம்பி பலரிடம் நான், ஏமாந்தேன். அவர்களை பற்றிய அனைத்து விவரங்களும் எனக்கு தெரியும். யார்– யார்? என்னை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை நன்கு அறிவேன். அவர்களை பற்றிய விவரங்களை பலரும் கூடி இருக்கும் இந்த கோர்ட்டில் கூறுவதற்கு தயக்கமாக உள்ளது. ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டால் அந்த தகவல்களை கூற தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சிவராஜன், இந்த தகவல்களை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய முடியுமா? என்று கேட்டார். அதற்கு சரிதாநாயர் ஒப்புக் கொண்டார். தனது வக்கீலுடன் கலந்து ஆலோசித்து பட்டியலை தாக்கல் செய்வேன் என்று கூறினார்.

இதனால் சரிதாநாயருடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் பலரும் கலக்கம் அடைந்துள்ள நிலையில், ஆசைக்கு தன்னை பயன்படுத்தி கொண்ட அரசியல்வாதிகள் பட்டியலை சீலிட்ட உறையில் வைத்து நீதிபதியிடம் சரிதா நாயர் இன்று தாக்கல் செய்தார்.

-அமுதவன்.

InCorpTaxAct

If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.


    Print       Email

You might also like...

Vanisri Birthday Special on SakshiTV : Aug 3rd 2:30 PM EDT

Read More →